கலைஞரின் சட்டமன்ற உரைகள்
ஆண்டில்
547
இருந்தாலும்கூட, அவர்களுக்கெல்லாம் அவர்களுடைய உறுப்பினர்கள் மூலமாக என்னுடைய பதிலைச் சொல்லலாம் என்கின்ற நம்பிக்கையில் நான் இருக்கின்றேன். ரவுடி ராஜ்யம் இங்கே அதிகரித்துள்ளது என்று இங்கே குறிப்பிட்டார்கள். சென்ற ஆண்டு 667 நபர்கள் குண்டர்கள் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கவில்லை இந்த அரசும், காவல் துறையும். நடப்பு இதுவரை 390 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 4 ஆண்டுகளாக குண்டர்கள் தடுப்புச் சட்டத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய விவரம். 1996-ல் 379 பேர்; 1997-ல் 502 பேர்; 1998-ல் 667 ரவுடிகள்; 1999-ல் இதுவரை 390 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருக் கிறார்கள். உங்களுக்கு நன்றாகத் தெரியும். இந்த ஆட்சி தொடங்கிய அந்தக் காலக்கட்டத்தில், 30-7-1996 அன்று ரவுடிகள் ஆசைத்தம்பி, மனோ, கோபால் ஆகியோர் சென்னை லயோலா கல்லூரி அருகில் காவல் துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இந்த அவையிலே உள்ள அத்தனை தலைவர்களும் எழுந்து அன்றைக்குத் தங்களுடைய பாராட்டுக்களைக் காவல் துறைக்குத் தெரிவித்ததை மறந்திட இயலாது. பிறகு 24-10-1996 அன்று ரவுடிகள் கபிலன், அருள் ஆகிய இருவரும் சென்னை அடையார் காந்தி நகரில் காவல் துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். 29-10-1997 அன்று சேலம் மாவட்டம், ஓமலூருக்கு அருகில் சிறைச்சாலைக்குக்கொண்டு செல்லப்பட்ட 5 குற்றவாளிகளைச் சுட்டுக் கொன்ற 3 ரவுடிகளை போலீசார் சுட்டுக் கொன்றார்கள். ஏப்ரல் 1999-ல் திருச்சி மாநகரையே கலக்கிக்கொண்டிருந்த ரவுடி கோசிஜின் என்பவன் காவல் துறையால் சுட்டுக்கொல்லப்பட்டான். அதே ஏப்ரல் 1999-ல் தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடி பவுல் என்பவன் காவல் துறையால் சுட்டுக்கொல்லப்பட்டான். பல்வேறு குற்றங்களைச் செய்து வந்த ரவுடி கைபாம் மோகன்,
(எல்லோருக்கும் இதுபோல அடைமொழி உண்டு கைபாம் மோகன். கால்பாம் மோகன் என்று இப்படி எல்லாம் அடைமொழி உண்டு) என்ற மிகப் பெரிய ரவுடி காவல் துறையைத் தாக்க முயற்சித்தபோது சுட்டுக்கொல்லப்பட்டான். ஜெயங்கொண்டத்தில் தீவிரவாதி என்கிற பெயரால் நீண்ட நெடும் நாட்களாக