உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

549

இல்லையென்று சொல்லவில்லை. இருந்தாலும் அது அளவுக்கு மீறிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது காவல் துறையி னுடைய பொறுப்பு என்பதை, எதிர்க்கட்சித் தலைவரைப்போல நானும் உணர்கிறேன். அவர் இங்கே பேசியதிலிருந்து, ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் சில ஓட்டல்களினுடைய பெயரைகளையே துணிந்து குறிப்பிட்டு, அங்கே இப்படியெல்லாம் நடைபெறுகின்றன என்று கூறியிருக்கும்போது, காவல் துறை கைகட்டிக்கொண்டு வாளா இருக்காமல், அவற்றைப்பற்றியெல்லாம் நிச்சயமாகக் கவனிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அவர்களையும் நான் அறிவுறுத்திக்கேட்டுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்பதையும் நான் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.

மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரால் (Recreation Clubs) சென்னையிலே, சில இடங்களில் சில தவறான காரியங்கள் நடைபெறுகின்றன. அதிலேகூட, 1998ஆம் ஆண்டு, 98 வழக்குகள் அந்த மன்றங்களின்மீது போடப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 1999-அதாவது, 31-4-1999 வரையில் இந்த ஆண்டு 35 வழக்குகள் அவர்கள்மீது போடப்பட்டு, அந்த வழக்குகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

நம்முடைய உறுப்பினர் திரு. சந்தானம் அன்றைக்குப் பேசும்போது, ஒரு குறையைச் சொன்னார்கள். மதுரையிலே உள்ள I.M.F.S. மதுபானக் கிடங்குகளை மாற்றுவதுபற்றி ஒரு குறை சொன்னார்கள். அங்கே உள்ள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு போய்விடும் என்று சொன்னார்கள். ஆனால், அதிலே உண்மையான நிலவரம் என்னவென்றால் ஒன்று இப்போது அந்தக் கிடங்குகள், மதுரை மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நெரிசலான பகுதியிலே இருக்கின்றன; தேவைப்படுகிற சரக்குகளை அங்கே வைப்பதற்கு இடம் போதவில்லை என்ற மற்றொரு குறை. மூன்றாவது சரக்குகளை ஏற்றவும், லாரிகள் நிற்பதற்கும் போதுமான இடம் கிடையாது. நான்காவதாக, வாடகை, சதுர அடியின் பேரிலே, 2 ரூபாய் 50 காசு என்று இருந்தது, திடீரென்று 7 ரூபாயாக உயர்த்தப் பட்டது. வாடகை இடம் அது; 7 ரூபாயாக உயர்த்திவிட்டார்கள். அதனால்தான் அந்தக் கிடங்குகளை மதுரை மத்தியப் பேருந்து