உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




556

காவல்துறை பற்றி

பலருக்குத் தெரியும். இவர்கள் எல்லாம் திருந்த வேண்டும் என்று இந்த அவையின் சார்பாகக்கூட நான் அவர்களையெல்லாம் கேட்டுக்கொள்வேன். அந்த 10,000 பேரை 1996-லே மீண்டும் கழக அரசு பதவியேற்றவுடன் அவர்களையெல்லாம் விட்டுவிடக் கூடாது. அந்த இளைஞர்களின் எதிர்காலம் கருதி அவர்களை யெல்லாம் தொடர்ந்து நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இந்த அவையிலே மாண்புமிகு உறுப்பினர்களாகிய நீங்கள் பலரும் கோரிக்கையை வைத்தீர்கள். அதை நாங்கள் புறக்கணிக்காமல் அந்த 10,000 பேரில் முதற்கட்டமாக 1,581 பெண் காவலர்கள் உட்பட, மொத்தம் 4,602 காவலர்களுக்கு நியமன ஆணை அனுப்பப்பட்டு, பயிற்சியும் தரப்பட்டு, அவர்கள் அனைவரும் 16-10-1997இல் பணியிலே அமர்த்தப்பட்டார்கள். இரண்டாம் கட்டமாக 1,023 பெண் காவலர்கள் உட்பட மொத்தம் 5,700 காவலர்களுக்கு நியமன ஆணை அனுப்பப்பட்டு அவர்கள் தற்போது பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த ஆட்சியில் இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நாங்கள் இந்த அவையிலே அறிவித்ததைத் தொடர்ந்து, காவலர்கள் தேர்வு முடிவுற்று, 3,465 காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தப் பட்டியலும் இரண்டு நாட்களுக்குமுன் வெளியே வந்திருக்கிறது. மேலும் துணை ஆய்வாளர்கள் 882 பேர் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இதன் தொடர்ச்சியாக மேலும் 5,000 புதிய காவலர்களை இந்த அரசு, இந்த ஆண்டு நியமிக்கும் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை (மேசையைத் தட்டும் ஒலி) நான் தெரிவித்துக்கொள்கின்றேன். அதிலே ஆடவர் 4,000 பேர், பெண்டிர் 1000 பேர் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இதிலே ஒரு கோரிக்கையைப்பற்றி எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் சொன்னார்கள். மற்றவர்கள், பேசியவர்கள் அத்தனை பேர்களும் சொன்னார்கள். உறுப்பினர் திரு. சொக்கர் அவர்கள் பேசாவிட்டாலும் கூட இங்கே உட்கார்ந்துகொண்டே அடிக்கடி தொல்லை கொடுத்துக் கொண்டேயிருப்பார். அதைப்போல, எல்லாக் கட்சியைச் சேர்ந்தவர்களும், ஆரம்பத்திலேயிருந்து, 1996-97-லேயிருந்து இந்தப் பிரச்சினையைப்பற்றி முன் வரிசையிலே வீற்றிருக்கின்ற தலைவர்கள் அனைவரும், கடந்த பட்ஜெட்டிலேகூட நம்முடைய திருநாவுக்கரசு போன்றவர்களும்,