உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




558

காவல்துறை பற்றி

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : சுட்டிக்காட்ட வில்லை என்று நான் சொல்லவில்லை. தலைவரைக் காப்பாற்றிய தற்காக நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன், உங்களுக்கு (சிரிப்பு).

எனவே, விதியில் இடம் இல்லாவிட்டாலும் 98 எஸ். ஐ.-க் களையும் எப்படியாவது சேர்க்கவேண்டுமென்று கேட்டு, நேற்று முழுவதும் உட்கார்ந்து, ஆராய்ந்து, அதற்கு ஒரு வழி கண்டுபிடித் திருக்கிறோம். தேவைப்படும் நேர்வுகளில் வயது மற்றும் அதற்கான விதிகளையெல்லாம் தளர்வு செய்து ஏனென்றால் இப்போது வயது அதிகமாகியிருக்கும். அதையெல்லாம் தளர்வு செய்து அடுத்து உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வு நடைபெறும்போது, இந்த 98 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே மற்றவர்கள் பட்டியலிலே இடம் பெறுவார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் (மேசையைத் தட்டும் ஒலி).

-

அதைப்போலவே, காவலர்கள் கடந்த ஆட்சியில் 329 பேர் மருத்துவத் தேர்வுக்கு அனுப்பப்பட்டு, பிறகு பணி காலியிடம் இல்லையென்று நியமனம் செய்யப்படவில்லை. அதுவும் சட்டத்தின் அடிப்படையிலே பார்த்தால் சரி. கருணை அடிப்படையிலே பார்த்தால் தவறு. அவர்கள் ஆரம்பத்திலேயே தவறு செய்துவிட்டார்கள். தேவைக்கேற்ற ஆட்களைத்தான் எடுத்திருக்க வேண்டும். தேவைக்கு அதிகமாக எடுத்தது மாத்திரமல்ல, செலக்ஷனோடு முடிக்காமல் அவர்களை மெடிக்கல் செக்கப்பிற்கும் அனுப்பிவிட்டார்கள். அதிலே தேர்வான பிறகு, அவர்களுக்கு இடம் இல்லை என்று சொல்லியது தவறு என்பதால், அது அவர்களுடைய குற்றம் அல்ல. ஆகவே, இப்போது எடுக்கப்படுகின்ற 5,000 காவலர்களுடைய தேர்வில் இந்த 329 பேருக்குத்தான் முதற்கட்டமாகப் பணி நியமனம் செய்ய வேண்டும். (மேசையைத் தட்டும் ஒலி). அதிலே வயது வித்தியாசங்கள் வருமேயானால் அந்த வயதைத் தளர்த்தி அவர்களைச் சேர்க்க வேண்டும். எனவே, 5000 என்பதில் 4500 தான் இருக்க வேண்டும்; இவர்களுக்கு இடம் வைத்துவிட்டுத்தான் மற்றவர்களுக்கு இந்தப் பட்டியலில் இடம் அளிக்க வேண்டுமென்றும் நேற்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை