உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

55

அல்லது அதற்குப் பிறகு அனுமதி வாங்கியிருக்கிறாரா? இதை உள்துறை அமைச்சர் அவர்கள் கவனிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இன்னொன்று - பொறுப்பான சட்டமன்ற உறுப்பினர்கள் எங்காவது தவறு நடந்தால் அதை எடுத்துக்காட்டுகிறபோது எவ்வளவு அலட்சியப்படுத்தப்படுகிறது என்பதற்கு மேலும் ஒரு ஆதாரம் கூற முடியும். திண்டிவனப் பகுதியில் கொடிமா என்கிற கிராமம் இருக்கிறது. அங்கே இருந்த நடராச ஆச்சாரி, பெரிய தம்பி கவுண்டர் ஆகிய இரண்டு பேர்களும் சேர்ந்து ஒரு வாரச் சீட்டு நடத்தினார்கள். அந்தச் சீட்டுக்குப் பெயரே அண்டாச் சீட்டு. அதை நம்பி ஏராளமான பெண்கள் சீட்டுக்கு ரூபாய் 36.80 காசு வீதம் கொடுத்தார்கள். சீட்டு விழுபவர்களுக்கு அண்டா வாங்கிக் கொடுப்பதாகச் சொன்னார்கள். ஆனால் சீட்டுக்குச் சேர்ந்த பணத்தை எடுத்துக் கொண்டு அந்த ஆசாமிகள் ஊரை விட்டே ஓடி விட்டார்கள். இவர்கள் ஓடிய விஷயத்தை 13-10-1965-லேயே மயிலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு ரிப்போர்ட் செய்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து 19-10-1965-இல் திரு. தங்கவேலு, எம்.எல்.ஏ. அவர்கள் விக்கிரவாண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு ரிஜிஸ்ட்டர் தபாலில் ஒரு மனு அனப்பியிருக்கிறார்கள். அந்தத் தபாலையே 22-ஆம் தேதி கையெழுத்திட்டுத்தான் அந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வாங்கியிருக்கிறார். இதுவரை அதன் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இங்கே தெரிவித்துக்கொள்கிறேன். அந்த மனுவைக் கூட இன்று நான் அமைச்சர் திருமுன் வைக்கிறேன்.

அடுத்து, மையூர் கிராமம் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கிறது. அந்த மையூரில் ஊராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றது. அந்த ஊராட்சி மன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த திரு. திருவேங்கடம் அவர்கள் வெற்றி அடைந்தார்கள். அவருக்கு எதிராக தேர்தலில் வேலை செய்து தோற்றவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு. ராஜேந்திரன் அவர்கள். அவர் மத்திய அமைச்சர் திரு. அழகேசனின் மைத்துனர். அவர் திரு. திருவேங்கடம் அவர்களது வெற்றிக்கு எப்படிப் பாராட்டு நடத்தினார் தெரியுமா? திரு. திருவேங்கடம் மாமண்டூர் ஹோட்டலை விட்டு வெளியே வருகிறார். இவர்கள்