உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

561

பொதுமக்களுடைய ஒத்துழைப்பு கோரி, அரசு, உள் துறையின் மூலமாகச் செய்த விளம்பரத்தினுடைய விளைவாக வந்த புகார் மனுக்கள் 1,323. அதிலே உண்மையான புகார்கள் 504. மற்ற புகார்கள் எல்லாம், வேண்டியவன் இல்லையென்றால் அவனைப்பற்றி எழுதுவது, வேண்டியவன் என்றால் எழுதாமலிருப்பது, என்பது போன்ற அந்தப் புகார்கள். இதிலே கைது செய்யப்பட்டவர்கள் 909 பேர். எனக்கே புகார்களைத் தரலாம் என்று திருச்சி செய்தியாளர்கள் கூட்டத்திலே அறிவித்து, அதன்படி எனக்கே வந்த புகார் மனுக்கள் 1,092; இதில் நடவடிக்கை எடுக்கப்பட்டவை 770; பதிவான வழக்குகள் 1,890; கைது செய்யப்பட்டவர்கள் 1,829 பேர்; கைப்பற்றப்பட்ட வண்டிகள் 15.

எனவே, அரசினுடைய இந்த முயற்சிக்குப் பொது மக்களுடைய ஆதரவு நிரம்ப இருக்கிறது என்பதை இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. உள் துறைக்கு மாத்திரமல்லாமல், முதலமைச்சர் முகவரிக்கே இந்தப் புகார்களை அனுப்புங்கள் என்பதற்கு இந்த அளவிற்கு நமக்குப் புகார்கள் வந்திருக்கின்றன; நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து பொதுமக்கள், சமுதாயத்திலே அக்கறை கொண்டவர்கள், இந்தப் புகார்களை அனுப்பினால் அரசு நடவடிக்கை எடுத்துக்கொண்டே இருக்கும். புகார்களும் வரும்; நடவடிக்கைகளும் எடுக்கப்படும்; ஆனாலும் கள்ளச் சாராயம் ஒழிந்துவிடுமா என்றால் நிச்சயமாக அதற்கு நம்பிக்கை என்னால் தெரிவிக்க இயலாது என்பதை இன்றைக்கு மிகுந்த மன வருத்தத்தோடு தெரிவித்துக்கொள் கின்றேன். இருந்தாலும், நாம் தொடர்ந்து அந்தக் குற்றவாளிகளைத் தண்டிக்கின்ற பயணத்திலே வெள்ளிகரமாக நடைபோட வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.

மதுவிலக்குத் துறையிலேயிருந்து நமக்கு வருகின்ற வருவாயைப்பற்றி ஒரு குறிப்பு சொல்ல விரும்புகின்றேன். இப்பொழுது நாம் I. M.F. L. என்கின்ற மதுக் கடைகளை மாத்திரம்தான் - வியாபாரத்தை மாத்திரம்தான் - அனுமதித்திருக் கின்றோம். பூரண மதுவிலக்கு இல்லை.

1995-96 ஆம் ஆண்டு 1425 கோடி ரூபாய் மதுவிலக்குத் துறை சார்பாக அரசுக்குக் கிடைத்தது.

19 - க.ச.உ. (கா.து.)