564
காவல்துறை பற்றி
காவல் நிலையங்களுக்குக் கட்டடங்கள் தேவை என்று பல உறுப்பினர்கள் வலியுறுத்தியிருக்கின்றார்கள். இப்போது தமிழகத்திலே முழுக் காவல் நிலையங்கள் 1190 இருக்கின்றன. புறக்காவல் நிலையங்கள் 111 இருக்கின்றன. மகளிர் காவல் நிலையங்கள் 57 இருக்கின்றன. ஆக மொத்தம் 1358 காவல் நிலையங்கள் தமிழகத்திலே இருக்கின்றன. இதில் அரசுக் கட்டடங்களில் இயங்குபவை 1027 நிலையங்கள். வாடகைக் கட்டடங்களில் இயங்குபவை 331. 1991 முதல் 1996 வரை கட்டடம் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டவை 8. 1996 முதல் இந்த மூன்றாண்டுக் காலத்திலே கட்டடங்கள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டவை 120 நிலையங்களுக்கு. 120 எங்கே, 8 எங்கே என்பதை எண்ணிப்பாருங்கள். இந்த 120இல் கட்டடம் கட்டி முடித்தது 33. பணிகள் தொடர்ந்து விரைவில் முடிய இருப்பவை 75. கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட இருப்பவை
12.
1999-2000ஆம் ஆண்டிற்கு, பகுதி-2 திட்டத்தின்கீழ் மேலும் 20 காவல் நிலையங்களுக்குக் கட்டடம் கட்ட ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கெனவே 4.23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீது செய்யப்பட்டுள்ளது. ஆனால், உறுப்பினர்களுடைய கோரிக்கையை ஏற்று, மேலும் 10 காவல் நிலையங்களுக்குக் கட்டடம் கட்ட அரசு முடிவு செய்து, அதற்காக மேலும் 2.2 கோடி ரூபாய் நிதி ஒதுக்க உள்ளது.
அந்தக் காவல் நிலையங்களின் பெயர்கள் வருமாறு :-
சென்னை நகரம்
ஈரோடு
ஈரோடு
ஈரோடு
நாமக்கல்
நாமக்கல்
சேலம்
ஆர். 3 அசோக் நகர் ஈரோடு தெற்கு
கடம்பூர்
பர்கூர்
ஆயில்பட்டி
குமாரபாளையம்
எடப்பாடி
(அன்றைக்குக்கூட திரு. கணேசன் அவர்கள்கூட கேட்டு
அழுதார்கள்)
சிவகங்கை
தூத்துக்குடி
சாலிக்கிராமம்
புதூர்