உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

567

அனைவருக்கும் தெரிவிக்கும்படி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

பெண் உதவி ஆய்வாளர்கள் இடம் காலியாக இருப்பது குறித்து திரு. கணேசன் அவர்கள் அன்றைக்கு வருத்தப்பட்டார். பா. ம. க. சார்பாகப் பேசிய உறுப்பினர் திரு. மணி அவர்களும் இதைக் குறிப்பிட்டார். 40 வயதான பெண்களை எல்லாம் ஓட விடலாமா; அப்படியெல்லாம் அவர்களைத் தேர்வு செய்யலாமா; அவர்கள் தேர்வு ஆவார்களா என்றெல்லாம் கேட்டுக் கொண்டார்கள் இருந்தாலும், அவைகளை எல்லாம் எண்ணிப் பார்த்து, காவலர்களிலே இருந்து வந்த அந்தப் பெண்கள் அந்தப் பயிற்சிகூட இல்லாமல் இருப்பது சரியா என்பதையும் மாண்புமிகு உறுப்பினரவர்கள் யோசிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

ஏற்கெனவே பணியிலே இருக்கும் பெண் காவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட 20 சதவிகிதமான, 60 உதவியாளர்கள் பணியிடங் களுக்கு 123 பேர்தான் விண்ணப்பமே செய்திருந்தார்கள். அதிலே 111 பேர் உடல் தகுதிக்கான தேர்வைப் பெறவில்லை. ஆகவே, அவர்களைத் தேர்ந்தெடுக்க இயலவில்லை. இருந்தாலும், அந்தப் பெண்மணிகளுக்காக, நம்முடைய உறுப்பினர் கண்மணிகள் உகுத்த கண்ணீரை மதித்து, அவர்களுக்கெல்லாம் மீண்டும் ஒரு வாய்ப்பு, இந்தத் தேர்விற்கு அளிக்கப்படும் என்ற உறுதியை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி). மீண்டும் தரப்படுகின்ற அந்த வாய்ப்பில் மிகக் கடினமான தேர்வுகள் எல்லாம் இருக்க வேண்டுமா என்பதுபற்றிப் பரிசீலிக்கப்படும் என்று சொல்லிக்கொள்கிறேன்.

திரு. செல்லக்குமார் ஒரு குற்றச்சாட்டைச் சொன்னார். பதில் அளிக்கும்போது அவர் இல்லை. இருந்தாலும், அதைக் கேட்டுக்கொண்டிருந்த உங்களுக்கெல்லாம் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காகச் சொல்கின்றேன்.

தீயணைப்புத் துறை அதிகாரி ஜெயப்பெருமாள் மீதுள்ள குற்றச்சாட்டுதான் அது. அந்த அதிகாரியை ஒன்றும் இந்த அரசு மன்னித்து விட்டுவிடவும் இல்லை; அவரைத் தொட அஞ்சவும் இல்லை. Departmental Enquiry தான் செய்திருக்கிறீர்கள் என்று