உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/572

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

571

ரூபாய் விவகாரம்தான். இதிலே ஒன்றும் தவறு நடப்பதற்கு வழி இல்லை என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

நம்முடைய நண்பர் திரு. அப்துல் லத்தீப் அவர்களுடைய பேச்சிற்குக் கொஞ்சம் விரிவான பதிலை நான் வழங்க வேண்டியவனாக இருக்கிறேன். அவர் பேசும்போது, "காவல் துறை ஒட்டுமொத்தமாக மக்கள் நம்பிக்கையைப் பெற்றிருக்க வேண்டும், அதற்கு மாறாகக் காவல் துறை என்றால் மக்களால் ஏளனம் செய்யக்கூடிய துறையாக மாறி இருப்பது மிகவும் வேதனைக் குரியது” என்றார். இதைக் காவல் துறைக்குப் பொறுப்பு வகிக்கின்ற என்னையே சொன்னதைப் போலத்தான் நான் எடுத்துக்கொள் கிறேன். காவல் துறை மீது நம்பிக்கை இல்லையென்றால் அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கின்ற முதலமைச்சர் மீதும் நம்பிக்கை இல்லை என்றுதான் அர்த்தம். எனவே, என்மீது நம்பிக்கை இல்லை என்ற ஒரு வார்த்தையைச் சொன்னபிறகு, அதற்கான விளக்கங்களை வழங்க வேண்டியது என்னுடைய கடமையும் பொறுப்பும் ஆகிறது.

16 பேரை நெல்லை மேலப்பாளையத்தில் எந்தக் குற்றமும் இல்லாத பிள்ளைகளைச் சிறையிலே அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று சொன்னார். நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் முஸ்லீம் இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த ஒன்றரை இலட்சம் பேரில் ஒருசிலர்தான் 'அல் உம்மா' இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு செயல்பட்டு வருகின்றார்கள். 'அல் உம்மா' இயக்கத்தை மறைந்த திரு. அப்துல் சமது அவர்களோ அல்லது அருமை நண்பர் திரு. அப்துல் லத்தீப் அவர்களோ ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல, ஏற்றுக்கொள்ளப் போகிறவர்களும் அல்ல. ஒரு பெரிய சமுதாயத்திலே புல்லுருவிகளாக இப்படிப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் தோன்றி, கோவையிலே என்றைக்கும் தமிழ்நாடு கண்டிராத அளவிற்குப் பயங்கரமான குண்டு வெடிப்புகள் நடத்தியதால் தமிழ்நாட்டின் வரலாறு எந்த அளவுக்குக் களங்கப்பட்டுவிட்டது என்பதை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மற்ற குண்டுகளைத் தேடி எடுத்து அவைகளையெல்லாம் வெடிக்காமல் சக்தி இழக்கச் செய்யாமல் இருந்திருந்தால் கோவை மாநகரத்தில் இன்னும் எத்தனை பேர் கொல்லப்பட்டிருப்பார்கள்; எத்தனை குழந்தை