கலைஞரின் சட்டமன்ற உரைகள்
579
துறை அமைச்சர் அவர்களுடைய தலைமையில் நடைபெற்ற இந்தக் குழுக் கூட்டத்தில், இந்தச் சட்டமுன்வடிவை, சட்டமன்றத் துறையின் ஆய்வுக் குழுவின் முடிவுக்கு அனுப்பிவைக்கலாம் என்று பரிந்துரை செய்ததன் பேரில் சட்டமன்றப் பேரவைச் செயலகத்தோடு கலந்தாலோசிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முன் சட்டமுன்வடிவு இருக்கும்போது, செலக்ட் கமிட்டிக்கு அனுப்ப இயலும் என்றும், சட்டமுன்வடிவு - மசோதா - பேரவையிலே ஏற்கெனவே நிறைவேறிவிட்ட காரணத்தினாலே இப்போது சட்டமன்றப் பேரவைச் செயலகம் கருத்துத் தெரிவிக்க இயலாது என்றும் சட்டமன்றப் பேரவைச் செயலகம் தெரிவித்து விட்டது. எனவே, சட்ட அமைச்சர் தலைமையிலான குழு மீண்டும் கூடி மத்திய அரசின் பரிந்துரைகளை ஆய்வு செய்து, தமிழ்நாட்டில் தற்போது சட்டம் ஒழுங்கு நன்றாக இருப்பதால், தற்சமயம் இந்த POTA சட்டத்திற்கு அவசியம் இல்லை என்று முடிவு எடுத்து, அந்த முடிவை இந்த அரசுக்கு அனுப்பிவைத் துள்ளது. அரசு அந்த முடிவை ஏற்று இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள் கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி). இந்தச் சட்டம் இல்லாமலேயே இவ்வளவு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சட்டம் வந்தபோது, இது தேவைதான் என்று கருதப்பட்டது. ஏனென்றால், அப்போது இருந்த நெருக்கடியான அந்தச் சூழ்நிலையிலே தேவைதான் என்று கருதப்பட்டது. சட்டம் இவ்வளவு வேகமாக, தீவிரமாக ஆனதற்கெல்லாம் காரணம், யாரையும் தொல்லை கொடுக்க வேண்டும் என்பதல்ல. தமிழ்நாட்டிலே நீண்ட நெடுங்காலமாகத் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், காயிலே மில்லத் போன்றவர்கள் கட்டிக்காத்து வந்த மத நல்லிணக்கத்திற்கு ஓர் ஆபத்து வராமல் தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் இதுபோன்ற தீவிர சட்டங்களையெல்லாம் இயற்ற வேண்டுமென்கின்ற நிலைமைக்கு ஆட்பட்டோம். இன்றைக்கு அந்த நிலையில்லை. இருந்தாலும்கூட, நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது. அப்படி வருகிற நேரத்தில், நாம் இன்றைக்கு இங்கே சட்டமன்ற உறுப்பினர்களாக அமர்ந்திருக்கின்றோம். இன்னும் 5, 6 நாட்கள் கழித்து தனித்தனி மேடைகளுக்குப் போய்விடுவோம். எந்தெந்த மேடைகளில் யார் இருப்போம் என்று இன்னும் உறுதியாக அறுதியிட்டுச் சொல்ல