உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/585

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




584

காவல்துறை பற்றி

மற்றும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் போன்றவை எந்தவிதமான அசம்பாவிதங்களும் இல்லாமல் நடந்தேறியதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். இந்த 4 ஆண்டுக் காலத்திலே நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்கள், இடைத் தேர்தல்கள் - 1996-இல் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள், தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்கள் மற்றும் தமிழக சட்டமன்றத்தினுடைய இடைத் தேர்தல்கள், இவையெல்லாம் மிக அமைதியான முறையிலே நடைபெற்றிருக்கின்றன என்பதையும் நான் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

தமிழ்நாட்டில் குற்ற நிகழ்வுகளினுடைய விகிதாச்சாரத்தைப் பற்றி நான் அல்ல, தேசிய குற்றப் பதிவுப் பிரிவு (National Crime Records Bureau) 1999ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் முடிய 6 மாதங்களில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற குற்ற நிகழ்வுகள் குறித்து புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. Mid Term Review. 1999 என்ற அந்த அறிக்கையிலுள்ள சில புள்ளி விவரங்களை நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.

கொலைகள் - இநத் 6 மாத காலத்தில் உத்தரப் பிரதேசத்தில் 4,668; பீகாரில் 2,716; மத்தியப் பிரதேசத்தில் 1,647; மராட்டியத்தில் 1,613; ஆந்திரப் பிரதேசத்தில் 1,367; தமிழ்நாட்டில் 907; இந்த 907 என்பது மிகக் குறைவு என்று நான் கூறமாட்டேன். இந்த 907 கூட நடைபெறாவண்ணம் நம்முடைய காவல் துறை இன்னும் கடமையாற்றிட வேண்டும் என்பதுதான் மாண்புமிகு உறுப்பினர்களடைய கருத்து என்பதை நான் மிகத் தெளிவாக உணர்வேன்.

கற்பழிப்பு போன்ற காரியங்கள் - மத்தியப் பிரதேசத்திலே 1,868; உத்தரப் பிரதேசத்திலே 825; மராட்டியத்தில் 648; இராஜஸ்தானில் 609; பீகாரில் 596; ஆந்திரப் பிரதேசத்தில் 485; அசாமில் 327; மேற்கு வங்கத்தில் 412; கேரளாவில் 214; தமிழ்நாட்டில் 202;

கூட்டுக்கொள்ளைகள் (Dacoity)-பீகாரில் 1,190; உத்தரப் பிரதேசத்தில் 509; அசாமில் 448; மராட்டியத்தில் 269; மேற்கு வங்கத்தில் 202; கர்நாடகாவில் 151; குஜராத்தில் 447; ஆந்திரப் பிரதேசத்தில் 123; தமிழ்நாட்டில் 87;