உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/596

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

595

கைத்துப்பாக்கிகள், 37 குண்டுகள், அம்பாசிடர் கார், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூ. 4 இலட்சம் கைப்பற்றப்பட்டன.

வருமான வரி அதிகாரிகளைப் போலவும், சங்க இலாகா அதிகாரிகளைப் போலவும் மேலும் Police C.I.D. அதிகாரிகள் போலவும் போலியான வேஷத்தோடு மக்களை ஏமாற்றியும் மிரட்டியும் கொள்ளைகள் நடத்திய சதீஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டார்கள். 11-3-1999 அன்று குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையிலே அடைக்கப் பட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஏமாற்று, கொள்ளை அடித்தல், வஞ்சித்து திருடுதல் போன்ற காரியங்கள் மாத்திரமல்ல, ரவுடிகள் ராஜ்யத்தைக்கூட இந்த 4 ஆண்டுகாலத்திலே நம்முடைய காவல் துறையினர் பெருமளவுக்குக் கட்டுப்படுத்தி, தகர்த்தெறிந்திருக் கிறார்கள்.

சென்னையிலே மோகன் என்ற கபிலன், ஆசைத்தம்பி, மனோ, கோபால் ஆகிய ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். திருநெல்வேலியில் முத்துராஜ் என்ற ரவுடி; கன்னியாகுமரியில் நாவல்காடு ஆர்னால்டு என்ற ரவுடி; தஞ்சாவூரில் கண்ணன் என்ற ரவுடி; தூத்துக்குடியில் பால் என்ற ரவுடி; சில நாட்களுக்கு முன்பு திருச்சியிலே பிச்சைமுத்து என்ற ரவுடி; சில மாதங்களுக்கு முன்பு திருச்சியிலே கோசிஜின் - இப்படி பிரபல ரவுடிகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள்.

பல்வேறு கொலைகள், கொள்ளைகள் மற்றும் வழிப்பறிகள் புரிந்து நீண்ட நாட்களாகத் தலைமறைவாய் இருந்துவந்த கொடூரமான ரவுடி ரவி என்கிற வெள்ளை ரவி கைது செய்யப் பட்டு 12-5-1999 அன்று குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

பல்வேறு கொலைக் குற்றங்கள், கொள்ளைகள், பணத்திற்காக ஆட்களைக் கடத்துதல், கட்டப் பஞ்சாயத்து செய்து குடியிருப்பவர்களை மிரட்டி வீட்டைக் காலி செய்ய வைப்பது போன்ற கொடுங் குற்றங்களைச் செய்து வந்த சைதாப்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி குமார் என்ற பங்க் குமார் கைது செய்யப்பட்டு 7-4-1999 அன்று குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இன்னொரு ரவுடி சேராவும் கைது செய்யப்பட்டார்.