உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/604

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

603

கொலைக்குப் பிறகு நாங்கள் விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொள்ளவில்லை. பத்மநாபா கொலைக்குப் பிறகே செல்வி ஜெயலலிதா அவர்கள் விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொண்டு விடுத்த அறிக்கை இது. (குறுக்கீடு). போதும், போதும், அதற்கு மேலே பேசமுடியாது. போதும் போதும். பத்மநாபா கொலைக்குப் பிறகு . . . (குறுக்கீடு).

மாண்புமிகு பேரவைத் தலைவர் : திரு. சுந்தரம், தெளிவாக சொல்லியாகிவிட்டது. அதற்குப் பிறகு நீங்கள் ஏன் எழுந்து நின்று கொண்டிருக்கிறீர்கள்? நான் உங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. உட்காருங்கள்.

மாண்புமிகு கலைஞர். மு. கருணாநிதி : பத்மநாபா கொலைக்குப் பிறகு என்றுகூடச் சொல்லமாட்டேன். அதற்கு முன்பே அமிர்தலிங்கத்தினுடைய கொலையானாலும் 'TELO'-வினுடைய தலைவர் ஸ்ரீசபாரத்தினத்தினுடைய கொலையானாலும் அதைப்போல வேறு சில போராளிகளுடைய கொலை, போராளிக் குழுவினுடைய தலைவர் உமாமகேஸ்வரன் அவர்களுடைய கொலையானாலும் இந்தக் கொலைகள் எல்லாம் நடந்த பிறகு, தன்னுடைய இனத்திலே உள்ளவர்களையே அழித்துவிட்டு தன்னுடைய இனத்தை எப்படிக் காப்பாற்ற முடியும் என்கின்ற அந்த ஆதங்கம் எங்களுக்கு ஏற்பட்டது. அதனால் நாங்கள் விடுதலைப் புலிகளை ஆரம்பத்திலிருந்தே எந்த அளவுக்கு ஆதரித்தோமோ அந்த அளவுக்கு ஆதரிக்கவில்லை, நாங்கள் ஒதுங்கிவிட்டோம் என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்வதற்காகத்தான் இதைக் கூறுகின்றேன். (குறுக்கீடு).

மாண்புமிகு பேரவைத் தலைவர் : திரு. சுந்தரம், உங்களுக்கு நான் அனுமதி கொடுக்கவில்லை. உட்காருங்கள் (குறுக்கீடு). நான் அனுமதி கொடுக்கவில்லை. நீங்கள் பேசுவது அவைக் குறிப்பில் ஏறாது. உட்காருங்கள். (குறுக்கீடு நான் அனுமதி கொடுக்கவில்லை என்று சொன்னதற்குப்பின் எழுந்து நின்றால் என்ன அர்த்தம்?

மாண்புமிகு கலைஞர். மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, இப்போதும்கூட, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கடத்தல்காரர்கள் 51 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்படி (N.S.A.)