606
காவல்துறை பற்றி
பிரிவு-2 என்ற புதிய காவல் துறைப் பிரிவை இந்த அரசு 1999-ல் ஏற்படுத்தியது. இதுவரையில் பொருளாதாரக் குற்றப் பிரிவில் மொத்தம் 235 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இவற்றில் 4 வழக்குகளில் எதிரிகள் முதலீட்டாளர்களுக்கு முதலீட்டுத் தொகை முழுவதையும் செலுத்திவிட்டபடியால், மேல் நடவடிக்கைகள் கைவிடப்பட்டிருக்கின்றன.
திரு. கே. சுப்பராயன் : பேரவைத் தலைவர் அவர்களே, நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்கள் இருக்கிறார்கள். நிறைய கடன் பெற்றுவிட்டு கட்டாமலேயே விட்டுவிடுகிறார்கள். அதனால் deposit செய்தவர்களுக்குப் பணம் கிடைக்க வழியில்லாமல் இருப்பதால், நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றவர்களிடம் கடன் பெற்றவர்களின் சொத்தை attach செய்கின்ற முறையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டுமென்ற வலியுறுத்தல் இருக்கிறது. அதுகுறித்து மாநில அரசு ஆலோசிக்குமா என்று அறிய விரும்புகிறேன்.
டாக்டர். அ. செல்லக்குமார் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நிதி நிறுவனங்களிலே மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள். நான் சொல்லுகின்றபோது மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். நீதிமன்றத்திலே காவல் துறையைக் கண்டிப்பு செய்த பிறகு, கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாகியிருக்கிறது. 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட பிறகும்கூட அவர்கள் தப்பிவிட்டார்கள் என்று சொல்லுகின்ற சூழ்நிலை இப்போது இருந்து கொண்டிருக்கிறது. பல நிதி நிறுவனங்களுடைய அதிபர்கள் SRI MARIAS என்று சொல்கின்ற நிறுவனம் NEW INDIA FINANCE என்கிற நிறுவனம், RICHARD AND CLIFF என்கிற நிறுவனம் போன்ற பல நிறுவனங்களினுடைய அதிபர்கள் இதுவரை கைது செய்யப்படாமல், அவர்கள் தப்பித்துவிட்டார்கள் என்று காவல் துறை அதிகாரிகள் சொல்கின்ற சூழ்நிலை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இங்கே மாண்புமிகு உறுப்பினர் சுப்பராயன் அவர்கள் சொன்னதுபோல, நான் ஏற்கெனவே கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையிலே பேசுகின்றபோது, இந்தக் கருத்தை