கலைஞரின் சட்டமன்ற உரைகள்
609
பல சாமியார்களிடம் ஏமாநத்ாலும்கூட, புதுப்புது சாமியார்கள் முளைத்துக்கொண்டு இருப்பதைப்போல, இந்த நிதி நிறுவனங்களில் ஏமாந்தாலும்கூட, புதுப்புது நிதி நிறுவனங்கள் முளைத்துக்கொண்டேதான் இருக்கின்றன என்பதை நான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.
திரு. சி. ஞானசேகரன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நிதி நிறுவன மோசடியில், ஆரணி, குடியாத்தம், வேலூர் போன்ற பகுதிகளிலே, பணத்தைப் பெற்றுக்கொண்டு, அவர்கள் cash certificate என்று கொடுப்பதற்குப் பதிலாக, pro- note என்று கொடுத்து விட்டிருக்கிறார்கள். இந்த pro-note என்கிற வார்த்தையை வைத்துக்கொண்டு, இதற்கு civil வழக்குப் போட்டுத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமேயொழிய, நாங்கள் criminal சட்டப்படி நடவடிக்கை எடுக்கமாட்டோம் என்று வழக்கும் பதிவு செய்யாமல், கைதும் செய்யாமல் காவல் துறையினர் இருந்து கொண்டிருக்கிறார்கள்; எந்தப் பொருளையும் seize செய்யாமல் இருக்கிறார்கள். pro-note என்று அவர்கள் மோசடியாக எழுதியிருக்கிற காரணத்தினால், அதை மோசடிக் குற்றமாகச் சேர்த்து, இந்தச் சட்டத்திலே கொண்டுவந்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா என்பதை அறிய விரும்புகிறேன்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, அது pro-note ஆக இருக்கிற வரையிலே pro-note தான். அது மோசடி என்று கண்டுபிடிக்கிற வரையிலே அது pro- note ஆகத்தான் இருக்கும். அதற்குள்ள சாஸ்திரம், சம்பிரதாயம் என்று இருக்க முடியுமே தவிர, pro-note-ஐப்போய் திடீரென்று மோசடி என்று சொல்ல முடியாது. அது pro-note இல்லை; அது மோசடி என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால், இரண்டுக்கும் சேர்த்து அவர்கள்மீது வழக்குத் தொடரலாம்.
இன்னொன்றையும் சொன்னார் செல்லக்குமார். வடபழனி காவல் நிலையம் நான் கேட்டேன்; நீங்கள் கொடுத்தீர்கள்; ஆனால் அந்தக் காவல் நிலையத் திறப்பு விழாவிற்கு எனக்கு அழைப்பு இல்லை; என்னைக் கூப்பிடவில்லை என்று சொன்னார். அதிலே பாதி உண்மை. காவல் நிலையம் கேட்டது உண்மை; நான்