உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/614

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

613

செய்யப்பட்டுவிட்டாகிவிட்டது. இங்கே சொன்னார்கள். கடைசி நேரத்திலேதான் எங்களுக்கு அனுப்புகிறார்கள், அதுவரையிலும் அனுப்புவதில்லை என்று. அதேமாதிரி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பிறகு, இந்த விவரங்களை சுப்பராயன் அவர்கள் என்னிடத்திலே இங்கே கொடுத்திருக்கின்றார்கள். அதைப்பற்றி நான் விசாரித்தேன். இந்த வழக்கிலே, அந்த முருகேசன் தன்னுடைய மைத்துனியையும் கல்யாணம் செய்துகொள்வதற்கு விரும்பியிருக்கிறார். அதனாலே ஏற்பட்ட தகராறு. அதனாலே விளைந்த கொலை. அது ரங்கோன் ராதா மாதிரி நடந்திருக்கிறது.

எனக்குத் தந்தத் தகவலைச் சொல்கிறேன். தகவல் வேறாக இருந்தால் திருத்திக்கொள்ளலாம். ஆனால் குற்றப் பத்திரிகை வரையிலும் வந்தாகிவிட்டது

முருகேசன் தனது மைத்துனியையும் திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும் அதைத் தொடர்ந்து அவர் மனைவியைக் கொலை செய்துள்ளார் என்றும் காவல் துறை கூறுகிறது. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்ததற்கும் கொலை நடைபெற்றதற்கும் சாட்சிகள் வாக்குமூலம் கொடுத்து அது குற்றவியல் நடுவர் முன்னால் பதிவு செய்யப் பட்டுள்ளது. முருகேசனிடமும் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு அவரிடமிருந்து, இறந்துபோன அந்தப் பெண்மணியினுடைய காது தோடும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கிலே விசாரணை முடிந்து குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, வாய்தா 6-6-2000 அன்று போடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை குறித்து ஏற்கெனவே ஒரு குறிப்பிட்ட இயக்கத்தினர் புகார் செய்ததன்பேரில், C.B., C.I.D. இந்த வழக்கை மேற்பார்வை செய்து, ஒழுங்காக விசாரணை நடைபெற்றதாக, அவர்களும் மதிப்பீடு செய்து, விசாரணை செய்து ஓர் அறிக்கையை கொடுத்திருக் கின்றார்கள்.

அதைப்போலவே விழுப்புரம் மாவட்டத்திலே, அஞ்சலை என்ற பெண், காவல் துறையினர் மிரட்டியதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்தார். இந்த வழக்கில் அஞ்சலை, ராஜா என்பரைக் காதலித்தார். காதலித்து அது கருவுறுகிற வரையிலே வந்து, அதற்குப் பிறகு அந்தக் காதலன்