உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/616

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

615

கள்ளச் சாராயம் பற்றி நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இங்கே பேசினார்கள். அவர்களையெல்லாம் குண்டர்கள் தடுப்புச் சட்டத்திலே கைது செய்ய வேண்டும் என்று கூறினார்கள். இப்போதே பல பேர் குண்டர்கள் தடுப்புச் சட்டத்திலேதான் கைது செய்யப்படுகிறார்கள். நாம் மதுவிலக்குக் கொள்கையிலே தீவிரமாக இல்லை என்று இங்கே சொல்லப்பட்டது. ஏன் இல்லை? அருமை நண்பர் எம்.ஜி.ஆர். காலத்திலேயிருந்து ஒரு புதிய முறை மதுவிலக்குக் கொள்கையிலே வகுக்கப்பட்டு இன்றளவும் அதுவே நடைமுறையிலே இருந்து வருகின்றது. அதன்படி இந்த ஆண்டு மாத்திரம் நமக்கு இந்த ஆயத் தீர்வையிலே கிடைத்திருப்பது ஏலம் உட்பட 1,830 கோடி ரூபாய். விற்பனை வரி மூலமாக 1,000 கோடி; ஆக 2,800 கோடி ரூபாய்க்கு மேல் இந்த ஆயத் தீர்வை மூலமாக தமிழக அரசுக்குக் கிடைத்திருக்கின்றது. இதனுடைய சந்து பொந்துகளிலே நுழைந்து கொண்டு கள்ளச் சாராய வியாபாரிகள் நடத்துகின்ற கூத்துகள், திருவிளையாடல்கள் மீது இந்த அரசு இப்போது மிக வன்மையாக நடவடிக்கை எடுத்து கண்டித்திருக் கின்றது. தண்டித்திருக்கின்றது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

1999ஆம் ஆண்டு மாத்திரம் 4,521 வாகனங்கள் கைப்பற்றப் பட்டன. 2000 ஆண்டில், 31-3-2000 வரை. 1,811 வாகனங்கள் T கைப்பற்றப்பட்டுள்ளன. 1999ஆம் ஆண்டில் கள்ளச் சாராயம் காய்ச்சுவோருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 4,20,878. கைது செய்யப்பட்டோர் 3,91,306 பேர். இதில் பெண்கள் 94,760 பேர் என்பதுதான் வேதனைக்குரியது.

ஆயத் தீர்வை இழப்பினைத் தடுக்கும் பொருட்டு, இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மது வகை சில்லறை விற்பனைக் கடைகளில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 1999ஆம் ஆண்டில் உரிமை விதிகளை மீறியதற்காக 7,878 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் சட்ட விரோதமாக bar நடத்திய குற்றத்திற்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 2,923. இவற்றையும் மீறி இந்தத் தவறு நடந்துகொண்டுதான் இருக்கிறது என்று நம்முடைய மாண்புமிகு உறுப்பினர்கள் கேட்பது எனக்குப் புரியாமல் இல்லை. இருந்தாலும்கூட இத்தனையையும் மீறி நடைபெறுகின்ற இந்தத் தவறுகளை அறவே ஒழித்துக்கட்ட நாம் அனைவரும் ஒன்றுபட்டு, ஒரே கண்ணோட்டத்தோடு, இந்தக்