உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/618

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

617

தமிழ்நாடு சிறப்புக் காவல்படையில் 11 அணிகளிலும் உள்ள வானொலி தொலைத் தொடர்புப் பிரிவில் தற்போதுள்ள 11 சார் ஆய்வாளர்கள் பதவிகளை 11 ஆய்வாளர் பதவிகளாகவும் மற்றும் 22 அவில்தார் பதவிகளை 22 சார் ஆய்வாளர் பதவிகளாகவும் நிலை உயர்த்தி ஆணை வழங்கப்படும்.

பொது மக்களின் புகார்களைப் பெறுவதற்கென்றே சென்னை மாநகரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, காவல் துறைத் தலைவர் அலுவலகத்தில் ஒரு தனி தொலைபேசி நிறுவப்படும். இந்த எண்ணை தொடர்பு கொள்வதற்காகும் தொலைபேசிக் கட்டணத்தை அரசே ஏற்கும். புகார் செய்பவர்களுக்கு தொலைபேசிக் கட்டணம் கிடையாது. இந்த வசதி படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி).

சிறு வணிகர் பாதுகாப்பிற்கு என்று Food Cell. Food Cell போலீசார் அரிசி, ration மண்ணெண்ணெய் ஆகியவற்றைக் கடத்துபவர்கள் மற்றும் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்பவர்கள்மீது Criminal நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சிறு சிறு வணிகர்களை எல்லாம் பெரும் இன்னலுக்கு ஆளாக்கி வருவதாகப் புகார்கள் அரசுக்கு வந்துள்ளன. எனவே பிரத்தியேகமான வழக்குகளைத் தவிர மற்ற நேர்வுகளில் Food Cell போலீசார் சிறு சிறு வணிகர்களைத் தேவையில்லாமல் சோதனைகள் மற்றும் விசாரணைகளுக்கு ஆட்படுத்தக் கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பிக்கும்.

காவல் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து காவல் நிலையம் வரை கணினிமயமாக்கவும், பொது மக்கள் காவல் நிலையங்களைத் துரிதமாகத் தொடர்புகொள்ளவும் ஒரு திட்டம் உருவாக்கப்படுகிறது. இதன்மூலம் காவல் துறை - பொது மக்கள் தொடர்பு நவீன முறையில் சீரமைக்கப்படும். கணினி மூலம் பொது மக்கள் புகார்களைக் கொடுக்கவும் முதல் தகவல் அறிக்கை நகல் பெறவும் முடியும். இதனைச் செயற்படுத்த உள் துறைச் செயலாளர் தலைமையில் காவல் துறை இயக்குநர் மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பவியல் துறைச் செயலாளர், கூடுதல் காவல் துறைத் தலைவர் ஆகியோரைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்படும்.