620
காவல்துறை பற்றி
விகிதம் வழங்க ஆணை பிறப்பிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).
நிதிநிலை அறிக்கையில் ஏற்கெனவே அறிவித்தவாறு ஆ யிரம் பெண் காவலர்கள் மற்றும் நான்காயிரம் ஆண் காவலர்கள் தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இது தவிர இந்த நிதி ஆண்டில் ஓய்வு பெறும் காவலர்களுக்குப் பதிலாக 1,500 காவலர்கள் தேர்வு செய்யப்பட வுள்ளார்கள். இதையும் தவிர கடலோரக் காவல் படை, அதி விரைவுப் படை மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஆகிய பணிகளுக்காக மேலும் 2,000 காவலர்கள் இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்கள்.
நடப்பாண்டில் தேர்வு செய்யப்பட்டு வரும் 5,000 காவலர்களோடு இந்த 3,500 காவலர்களும் சேர்ந்து 8,500 காவலர்கள் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).
1996ஆம் ஆண்டு முதல் 2000 வரை, 4 ஆண்டுகளில் 57 புதிய காவல் நிலையங்கள் திறக்கப்பட்டன. 36 புறக்காவல் நிலையங்கள் முழுக்காவல் நிலையங்களாக நிலை உயர்த்தப் பட்டன.
புதிய காவல் நிலையங்கள் கோரி 150-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சட்டமன்ற உறுப்பினர்களால் என்னிடம் தரப்பட்டுள்ளன. இந்த 150 கோரிக்கைகளில் 15 கோரிக்கைகள் மாத்திரமே ஏற்கப்படுகின்றன.
மாவட்டங்களிலே உள்ள காவல் நிலையங்களின் எண்ணிக்கை, அந்தப் பகுதியிலே நடைபெறும் குற்றங்களின் எண்ணிக்கை மற்றும் சட்டம் ஒழுங்கு நிலை ஆகியவற்றை மனதிலே கொண்டு இந்த 15 காவல் நிலையங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன:
1. திருப்பூர்-மங்கலம் 2. மேல வளவு சிவகிரி
3.
4.
சங்கரன்கோவில்