உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/630

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

ஓடாகத் தேய்கின்ற அப்பாவின் புத்திரனே!

629

குருவிக் கூடான வீட்டுக்குள்ளே தவழுகின்ற குல விளக்கே! கொசுக்கடிக்கு அஞ்சாமல் குவளை மலர் கண் வளராய்! காக்கி உடை போட்டுகிட்டு சேப்புத் தொப்பி மாட்டிக்கிட்டு நாட்டைக் காக்கும் வீரனுக்கு உன்னைப் போல

நாலு வந்து பிறந்துவிட்டால். கமண்டலமும் தேவையடா.

காவி உடை வேணுமடா. .

இது பாட்டு. (மேசையைத் தட்டும் பலத்த ஒலி). இது ஒரு காவல்துறை நண்பருடைய வீட்டிலே உள்ள வறுமை, இல்லாமை, இந்தக் கொடுமையை அவருடைய மனைவிமூலமாக, அந்தக் குழந்தையின் தாய் மூலமாக, எடுத்துக்காட்டுகின்ற பாட்டு. இதை பக்தவத்சலம் தடை செய்தது நியாயம்தான். நானாக இருந்தால்கூட தடைதான் செய்திருக்க வேண்டும். வேறு என்ன வழி? ஏனென்றால், இது காவல் துறையைத் தூண்டிவிடுகின்ற அளவிற்கு இருக்கின்ற பாட்டு என்பதால், தடை செய்யப்பட்டு, 'உதய சூரியன்' நாடகமே எங்கும் நடத்த முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது அப்போது.

நாங்கள் தந்திரசாலிகள்; 'உதய சூரியன்' என்பதை 'இளைஞன் குரல்' என்று மாற்றி நடத்திக்கொண்டிருந்தோம். அது வேறு விஷயம். இதற்குப் பிறகு, இந்த அவல நிலைக்குப் பிறகு, ஆட்சிக்கு வந்தோம். ஆட்சிக்கு 1967ஆம் ஆண்டு வந்தோம் என்றால், எங்கள் தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த பிறகு, அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்ட நான், 1969-ல் பொறுப்பேற்றவுடன், முதலில் நான் எழுதினேனே தாலாட்டு, நினைவிலே பதிந்திருந்த காரணத்தால், பாடியதோடு ருக்கக்கூடாது; பரிகாரமும் தேட வேண்டும் என்பதற்காக, முதன்முதலாக நான் அமைத்த கமிஷன்தான் கோபாலசாமி, I.C.S. தலைமையிலே அமைக்கப்பட்ட போலீஸ் கமிஷன். (மேசையைத் தட்டும் ஒலி). அதனுடைய பரிந்துரைகள் 133. அந்த 133 பரிந்துரைகளில் என் தலைமையில் இருந்த கழக அரசு ஏற்றுக் கொண்ட பரிந்துரைகள், 115. (மேசையைத் தட்டும் ஒலி). அதன்பிறகு, தொடர்ந்து 1989-ல் சபாநாயகம், I.A.S. தலைமையில் இரண்டாவது போலீஸ் கமிஷன். பரிந்துரைகள் 112. நடைமுறைப் படுத்தியது 79.