638
காவல்துறை பற்றி
மயில்சாமி என்பவர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும்போது, திடீரென்று உடல் சுகவீனமுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 11-9-2003 அன்று உயிரிழந்தார். தமக்கு அது மிகுந்த வருத்தம் அளிப்பதாகத் தெரிவித்து, அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள், பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.
எப்பொழுது? 12-9-2003-ல். ஒரு இலட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்திருந்தார். இந்த அறிக்கை, ‘தினத்தந்தி’-யில் 13-9-2003 அன்று வெளிவந்தது. முதலமைச்சரின் இந்த அறிக்கையில், பாதுகாப்புப் பணியிலே என்று கூறப்பட்ட போதிலும், செல்வி ஜெயலலிதா அவர்களின் பாதுகாப்புப் பணியிலே ஈடுபட்டிருந்தபோதுதான், அவர் உடல்நலம் பாதிக்கப் பட்டார். இந்தச் செய்தியும் அதேநாளில் ஏடுகளில் வெளிவந்தது. முதலமைச்சர் அம்மையார் அவர்கள், 12-9-2003 அன்று அறிவித்தவாறு, அந்த ஒரு இலட்சம் ரூபாய் மயில்சாமி குடும்பத்திற்கு வழங்கப்பட்டதா? இல்லை.
இதற்கான கோப்பு முதலமைச்சருடைய அறிவிப்புக்கு, 15 மாதங்களுக்குப் பிறகு 22-12-2004 அன்று முதலமைச்சர் அலுவலகத்திற்கு, ஒப்புதலுக்காக அனுப்பப்படுகிறது. 22-12-2004 அன்று அனுப்பப்ட்ட கோப்பு, முதலமைச்சர் அலுவலகத்திலே யிருந்து மீண்டும் திரும்ப வரவில்லை என்றும், இறந்துபோன மயில்சாமியின் தாயார், அந்தத் தொகையைக் கேட்டு வலியுறுத்துவதாகவும், கோப்பினைத் திரும்ப அனுப்பக் கேட்டு, ஒரு குறிப்பு முதலமைச்சர் அலுவலகத்திற்கு 14-09-2005 அன்று அனுப்பப்படுகிறது. இறந்தது 12-9-2003. முதலமைச்சர் ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது 12-9-2003. இதற்காக ஒப்புதல் கேட்டு, கோப்பு முதலமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட தேதி 22-12-2004. அதாவது 15 மாதங்களுக்குப் பிறகு. இந்தக் கோப்பு, அதற்குப் பிறகு 9 மாத காலம் வரை திரும்பி வராத காரணத்தால், அந்தக் கோப்பை உடனடியாகத் திரும்ப அனுப்பக்கோரி, உள் துறை, முதலமைச்சர் அலுவலகத் திற்குக் குறிப்பு அனுப்பிய தேதி 14-9-2004. அதாவது 9 மாதத்திற்குப் பிறகு குறிப்பு அனுப்புகிறார்கள்.