கலைஞரின் சட்டமன்ற உரைகள்
641
தலைவர் அவர்கள் இங்கே குறிப்பிட்டார்கள். எப்படித்தான் இந்த உண்மைக்கு மாறான செய்தியைச் சொல்ல அவருடைய உள்ளம் பண்பட்டதோ என எனக்குத் தெரியவில்லை. (மேசையைத் தட்டும் ஒலி).
17-5-2001-ல் நீங்கள் ஆட்சிக்கு வந்ததும், தம்பி பரிதி இளம்வழுதி கைது 26-5-2001-ல் ஆற்காடு வீராசாமியினுடைய தம்பி தேவராஜ் கைது. 27-5-2001-ல் பரசுராமன், முன்னாள் M.P. கைது; ஒரு பாவமும் அறியாதவர் அவர், பார்த்தாலே பசு போல இருப்பார்; அவர் கைது. 30-5-2001-ல் புரசை ரங்கநாதன் கைது. மறைந்த தாமரைக்கனி கைது. 13-6-2001-ல் வளர்ப்பு மகன் சுதாகரன் கைது. 21-6-2001-ல் திருமாவளவன் கைது. 29-6-2001-ல், நள்ளிரவில், நான் கைது. தொடர்ந்து அதே நாளில், தம்பி முரசொலி மாறன் கைது. தம்பி பாலு கைது. மு. க. ஸ்டாலின் கைது. மதுரையில் பி. டி. ஆர். பழனிவேல் ராஜன் கைது, மு. க. அழகிரி கைது. சாலைப் பணியாளர்கள் பணி நீக்கம். அமைச்சர்கள் வீடு சோதனை. பொன்முடி கைது. 'நக்கீரன்' கோபால் கைது. ESSMA சட்டத்தின்படி, என்மீதும் எதிர்க்கட்சியினர் மீதும் வழக்கு. இளம் பெண் செரினா மீது வழக்கு. இவ்வளவும், ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில், இரண்டு மாதத்தில் நடைபெற்ற சம்பவங்கள். நாங்கள் இப்பொழுது பழிவாங்குகிறோம் என்று சொல்கின்றீர்களே, எனக்கு என்ன பதில் அளிக்கப் போகின்றீர்கள் என்று எனக்கே தெரியவில்லை.
ஒன்றைச் சொல்ல வேண்டும். ஏதோ சொல்லவேண்டும்; ஏதோ நான் பழைய வழக்கை எடுத்துவிட்டேன் என்று கருதக்கூடாது. டான்சி வழக்கு நடைபெற்று, அம்மையார் அவர்கள் அதிலே விடுதலை பெற்றுவிட்டார்கள். அது வேறு விஷயம். விடுதலை பெற்றுவிட்டார்கள். ஆனால், விடுதலை அளித்த நீதிபதி என்ன சொல்லியிருக்கிறார் என்றால், "நீங்கள் உங்கள் மனசாட்சியை நினைத்து, அதற்கேற்ப பரிகாரம் தேடிக் கொள்ளுங்கள்; டான்சி நிலத்தை அரசுக்குத் திரும்ப ஒப்படைத்து விடுங்கள்” என்று சொல்லியிருக்கிறார்.
இப்பொழுது என்னவாயிற்று? அவர் சொன்னது, 24-11-2003; சொல்லி, அம்மையாரை விடுதலை செய்தார்கள். அவர்