உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/656

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

655

சங்கத்திலிருந்து நேரடியாக விலைப்புள்ளிகள் பெற்று பனியன்களைத் தயாரித்து வழங்கிட, அந்தச் சங்கத்திற்கு ஆணைகள் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

இதுவரை தமிழ்நாடு ஆயுதப் படையிலே பணியாற்றும் காவலர்களுக்கு விடுப்புப் பயணச் சலுகை Leave Travel Concession - கிடையாது. இனி, அவர்களுக்குக் காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு இருப்பதைப்போல, விடுப்புப் பயணச் சலுகை வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி).

இடர்நிதி என்று அவர்களுக்கு ஒரு சிறப்பு நிதி வழங்கப் படுகிறது. இடர்களையும் நிதி. இடருகிற நேரத்திலே பயன்படுத்திக்கொள்வதற்கான நிதி. அதை இடர்ப்படி என்றும் சொல்வார்கள். இடர்ப்படியோ அல்லது இடரும்படியோ தெரியாது. அந்த இடர்ப்படியை, இப்போது 60 ரூபாயாக கொடுத்து வருகிறோம். அது இனிமேல் 120 ரூபாயாக உயர்த்தப்படும். (மேசையைத் தட்டும் ஒலி).

அதைப்போலவே, துணைக் கண்காணிப்பாளர்களும், கூடுதல் கண்காணிப்பாளர்களும் தற்போது இடர்ப்படியாக பெற்றுவரும் ரூபாய் 70 என்பதை, இனி 140 ரூபாயாக னி உயர்த்தியுள்ளோம். (மேசையைத் தட்டும் ஒலி). இந்த உயர்வு 1-9-2006 முதல் நடைமுறைக்கு வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவல்துறையிலே இடர்ப்படியை உயர்த்துவது என்று முடிவெடுக்கப்பட்டதைப் போலவே, தீயணைப்புத் துறையிலும் தீயணைப்போருக்கு Fireman - தற்போதுள்ள இடர்ப்படி, மாதம் ஒன்றுக்கு 40 ரூபாய் என்பதை, இனி 120 னி 120 ரூபாயாக உயர்த்தியுள்ளோம். (மேசையைத் தட்டும் ஒலி). மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலருக்கு வழங்கப்படும் 60 என்பதை 140 ரூபாயாக உயர்த்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி). இதுவும் 1-9-2006 முதல் அமலுக்கு வரும்.