662
காவல்துறை பற்றி
மரணத்தை துச்சமாக மதித்து கடுமையாக போரிடுகின்ற அந்த தியாகச்சீலர்களை தி.மு.கழகம் பாராட்டுவதற்கு கடமைப் பட்டிருக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு உழைப்பின் திறமையை உணர்ந்து அவர்களுக்கு மேலும் பல சலுகைகள் வழங்கவேண்டும் என்று கேட்பதுதான் இந்த வெட்டுப் பிரேரணை மீதும் இந்த மான்யத்தின் மீதும் நான் எழுப்புகின்ற குரல் என்பதை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன்.”
தலைவர் அவர்களே, நேற்றைக்கு வெட்டுத் தீர்மானத்தைப் பற்றி பெரிய பிரச்சினை இங்கே வந்தது. அதனைப் பற்றி விளக்கம் அளிக்கும் போது ஒன்றைச் சொல்ல விட்டுவிட்டார்கள். வெட்டுப் பிரேரணையினுடைய வாசகம் எப்படி இருக்க வேண்டும் என்றால் கல்வித் துறைக்கு அல்லது நீர்ப்பாசனத் துறைக்கு 2000 கோடி என்று ஒதுக்கி இருப்பதிலிருந்து 100 ரூபாயை வெட்ட வேண்டும் என்றுதான் தீர்மானம் கொடுப்பவர்கள் கொடுப்பார்கள். எதிர்க் கட்சிக்காரர்கள் கூட்டவேண்டும் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் வெட்டுத் தீர்மானம் 100 ரூபாயை குறைக்க வேண்டும் என்று இருக்கும். அப்படிச் சொன்னால்தான் அவர்களுக்குப் பேச வாய்ப்பு. கூட்ட வேண்டும் என்று கேட்பதற்குப் பதிலாக குறைக்க வேண்டும் என்று கேட்டு - அந்த வெட்டுத் தீர்மானத்தின் மீதுதான் எதிர்க்கட்சிக்காரர்கள் பேசுவார்கள். ஆனால் பேசும்பொழுது இங்கே நம்முடைய எதிர்க்கட்சியினுடைய தலைவர்களும் மற்றும் தோழமைக்கட்சிகளுடைய தலைவர்களும், உறுப்பினர்களும் எடுத்துரைத்ததைப்போல இன்னும் காவல்துறையினருக்கு தேவை தேவை தேவை, இவைகளை எல்லாம் தாருங்கள் என்று கேட்பதைப் போலத்தான் கேட்பார்கள். அப்படிப்பட்ட அந்த நிகழ்விலேதான் நான் இந்த அவையில் எதிர்க் கட்சியினுடைய துணைத் தலைவராக நின்று பெருந்தலைவர் காமராஜருக்கு முன்பு, பக்தவத்சலனாருக்கு முன்பு, சி. சுப்பிரமணியம் அவர்களுக்கு முன்பு, காவல்துறையினருக்கு இன்னும் பல வசதி வாய்ப்புகளை செய்திட வேண்டும் என்று கேட்டேன்.
இங்கே நம்முடைய ஜி. கே. மணி அவர்கள் பேசும்போது அவர்களுக்கு சம்பளத்தையாவது உயர்த்திக் கொடுக்கக் கூடாதா? என்ன செய்யப்போகிறீர்கள். இப்போதாவது, அவர்கள் ஏங்கித்