உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/669

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




668

காவல்துறை பற்றி

தெரியும் அவருக்கு. தெரிந்தாலும் ஒரு விவாதத்திற்கு சொல்லி வைக்க வேண்டுமே என்பதற்காக சொல்கிறார். Feeding குறைவாக இருக்கிறது என்று யாராவது சொல்லமுடியுமா? அதுவும் ஜெயக்குமாரைப் பார்த்து Feeding குறைவு என்று யாராவது சொல்வார்களா? (மேசையைத் தட்டும் ஒலி).

பொதுவாக தமிழகத்தில் காவல்துறையில் 62ஆம் ஆண்டு மொத்த எண்ணிக்கை 29,560 பேர். 64-ல் 35 ஆயிரம் பேர். 69-ல் 41,337 பேர். 89-ல் 66,856 பேர். 2001-ல் 91,340 பேர். 2006-ல் 98,897 பேர். காவல்துறையினருடைய மொத்த எண்ணிக்கை 1 லட்சம் பேர் என்ற இலக்கை அடையும் என்பதை நான் இங்கே மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி).

இவர்களுக்குத்தான் அந்த காலத்தில் மாதம் 65 ரூபாய் ஊதியம் இருந்து இன்றைய தினம் 6000 ரூபாய் என்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்றால், ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு கட்சியினுடைய அரசும் அவர்களால் ஆன உதவிகளை சம்பள உயர்வை காவலர்களுக்கு தந்ததன் காரணமாகவும் ஒன்றிரண்டு அரசு அதைப் பற்றி கவலைப்படாமல் இருந்தாலும் குறிப்பாக தி.மு.கழக அரசைப் பொறுத்தவரையில், நானே அந்த காலத்திலே போலீஸ்காரர்களுக்காக பாடி, பாட்டு எழுதி நாடகமே நம்முடைய பெரியவர் பக்தவத்சலம் அவர்களால் தடை செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட நாடகத்தினுடைய பாடலை இதே அவையில், நீங்கள் தடை செய்தாலும் இங்கே பாடுகிறேன் கேளுங்கள் என்று "போலீஸ் வேலைக்கென்று போகின்ற ஙொப்பனுக்கு புத்திரனாக வந்து உதித்த தரித்திரமே கண்வளராய், சிகப்புத் தொப்பி மாட்டிக் கிட்டு காக்கி உடை போட்டுக்கிட்டு போகின்ற ஙொப்பனிடம் பழைய கடன்காரன் வந்து பாக்கியைக் கேட்டால் கமண்டலமும் வேணுமடா, காவி உடை வேணுமடா” என்று பாடிய அந்தப் பாட்டையெல்லாம் பெரியவர் பக்தவத்சலனாருக்கு நேராகவே பாடிக்காட்டி (மேசையைத் தட்டும் ஒலி) நாடகம் நடித்தால் கைது செய்வனே என்று சொன்னீர்களே, உங்களுக்கு நேராகவே இப்பொழுது பாடி நடித்திருக்கிறேன், கைது செய்யுங்கள் பார்க்கலாம் என்று நானும் பேச அவரும் அதை வேடிக்கையாக அன்றைக்கு எடுத்துக் கொண்டார்கள். இன்றைக்குப் போல இவ்வளவு ஆக்ரோஷங்கள் அன்றைக்கு நம்முடைய அவையிலே