உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/677

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




676

காவல்துறை பற்றி

என்பவரும் சோதனை செய்து இவை அனைத்து தரப்பு கப்பல்களிலும் பொதுவாகப் பயன்படுத்தக்கூடிய சமிக்ஞை தோட்டாக்கள். சிக்னல் கேட்ரிட்ஜஸ் என்றும் வேறு ஆபத்து இதனால் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக மண்டபம் காவல் நிலையத்தில் குற்ற எண் 74/07 பிரிவு 102 கு.வி.ந.ச. வின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்ற செய்தி எனக்கு கிடைத்திருக் கிறது. ஆகவே, அது கண்டு பீதியடைய வேண்டியதில்லை, பதட்டப்படத் தேவையில்லை என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த வகையிலே கடலோரத்தில் நம்முடைய தமிழகம், இந்தியாவினுடைய பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்கின்ற வகையில் தொடர்ந்து நம்முடைய காவல்துறையினுடைய பணி மேற்கொள்ளப்படும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு விஷயத்தை சொன்னார்கள் - மத்திய நிதி அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் ஒரு தாக்கீது அனுப்பி யிருக்கிறார். காவலர்களுக்கு கடன் கொடுக்கக்கூடாது என்று ஒரு தாக்கீது அனுப்பியிருக்கிறார் என்று ஒரு குற்றச்சாட்டைப்போல இங்கே சொன்னார்கள். அது பற்றி உடனடியாக நாங்கள் விசாரித்தபோது அப்படி ஒரு தாக்கீது அனுப்பப்படவில்லை என்று நம்முடைய நிதி இலாக்காவிற்கு செய்தி வந்திருக்கிறது. வேறு இலாக்காக் களையும் விசாரித்த போது சிதம்பரம் அப்படி எந்த தாக்கீதும் அனுப்பவில்லை. போலீசாருக்கு கடன் கொடுக்கக் கூடாது என்று அவர் சொல்லவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே, போலீசாரைப் பற்றியும் அவர்களுடைய செயல்பாடுகளைப் பற்றியும், அவர்களை வைத்து நடத்துகின்ற ஆட்சியினரும், இரு தரப்பிலும் நம்முடைய கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருக் கின்றோம்.

நம்முடைய செல்வப் பெருந்தகை நேற்று பேசும்போது கடந்த கால ஆட்சியில், வேண்டுமென்றே அவர்மீது ஒரு பெரிய பொய் வழக்கு நடத்தி பின்னர் அதை விசாரித்த காவல் துறையினர் சி.பி.ஐ. அப்படி குற்றச்சாட்டு எதுவுமே இல்லை என்று சொல்லிவிட்டார்கள் என்று குறிப்பிட்டார். நேற்று குறிப்பிட்டதோடு