உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

67

அவர்கள் எந்தப் பிரச்னையானாலும் கொள்முதலைக் கொண்டு வருகின்றார்களோ அதைப் போலவே சட்டம், ஒழுங்கு, அமைதி வைகளைப் பற்றி எல்லாவற்றிலும் பேசி இருக்கிறார்கள். ஆனால், காவல் துறை மானியத்திலே பேசுவது மிகுந்த பொருத்தம் உடையது என்ற காரணத்தால் தமிழ்நாட்டிலே சட்டம் இல்லை, அமைதி இல்லை, ஒழுங்கு இல்லை என்று நண்பர் மார்டின் அவர்களும், காங்கிரஸ் தரப்பிலே பேசிய உறுப்பினர் களும், இறுதியாக எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் இதே வகையில் நன்கு வாதாடி இருக்கிறார்கள். சட்டம், அமைதி ஒழுங்கு இல்லையென்று ஏன் கூறுகிறார்கள்? ஏன் இப்படிப்பட்ட ஒரு சுலோகத்தை தி.மு.க அரசு தொடங்கியதிலிருந்து அவர்கள் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்? காங்கிரஸ் ஆட்சியின்போது எவ்வளவோ அராஜகங்கள் நடைபெற்றிருக்கின்றன. எத்தனை முதுகுளத்தூர்கள் நடைபெற்றிருக்கின்றன? அந்த நேரத்திலே கூட, எதிர்க்கட்சிக்காரர்கள் பிரச்சார மேடையில் சட்டம் இல்லை, அமைதி இல்லை, ஒழுங்கு இல்லை என்று பழைய 'வந்தே மாதரம்' போல் ஒரு சுலோகம் வைத்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால், தி.மு.க. அரசு தொடங்கிய காலத்திலிருந்து காங்கிரஸ் நண்பர்கள் மேடைதோறும், இந்த மன்றத்திலே பேசுகின்ற வாய்ப்பு கிடைக்குந் தோறும் இதையே திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றார்கள். இந்திய அரசியல் சட்டப் பிரிவுகள், 352, 356, 360-ன்படி உள் நாட்டுக் குழப்பங்கள் ஏற்படும்போதும், அரசியல் சட்டம் பாது காக்கப்படாமல் சட்டம், ஒழுங்கு கெடும்போதும் ஜனநாயக யந்திரம் செயலற்றுப்போகும் போதும், பொருளாதாரத்தில் குழப்பம் ஏற்படும்போதும், மத்திய அரசு தலையிட்டு ஜனாதிபதி ஆட்சி ஏற்படுத்தலாம் என்றிருக்கிறது. இதை அப்படியே வளர்த்துக் கொண்டு போய் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வருவதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்றுதான் திட்டவட்டமாக நம்புகிறேன். அதைத்தான் எதிர்க்கட்சித் தலைவர் தன்னுடைய பேச்சிலே சொன்னார். ஆறு மாத காலக் கட்டம் தருகிறோம். அதற்குள் திருந்தாவிட்டால் புரட்சி, அந்தப் புரட்சி அடிப் படையிலே சட்டம், அமைதி, ஒழுங்கு என்கின்ற பேச்சு, மத்திய சர்க்காருடைய தலையீடு. எந்தப் புரட்சியாக இருந்தாலும், சர்ச்சில் சொன்னாரே 'London can take it' என்று அதைப் போல் திராவிட