கலைஞரின் சட்டமன்ற உரைகள்
காவல்
681
தற்போது ஆயுதப்படை உள்ளூர் மற்றும் சிறப்பு பிரிவுகள் பணியாளர்களுக்கு கூடுதல் நேர ஊதியமாக நாளொன்றுக்கு ரூ. 150 வழங்கப்படுகிறது. இந்தக் கூடுதல் நேர ஊதியம் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் பணியாற்றுபவர் களுக்கு அளிக்கப்படுவதில்லை.
தமிழ்நாடு சிறப்புக் காவல்படை பணி, பயிற்சி மையம் மற்றும் சிறப்புப்படையில் உள்ள பணியாளர்களுக்கும் கூடுதல் நேர ஊதியம் வழங்கப்படும். இதன் காரணமாக 12,690 பேர் பயன்பெறுவார்கள்.
அறிவிப்பு 11 பணியமர்த்தப்பட்டு
கருணை அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை இரண்டாம் நிலைக் காவலர்களாக தேர்வு செய்தல்.
காவல்துறையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளுக்கு கருணை அடிப்படையில் பணியமர்த்தப்படுவதற்கு 1460 நபர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இவர்களில் காவலர் பதவிக்கு தேவையான கல்வி மற்றும் உடற் தகுதி உள்ளோருக்கு இரண்டாம் நிலைக் காவலர் பதவி அளிக்கப்படும்.
அறிவிப்பு 12 - கருணை அடிப்படையில் தொகுப்பூ தியத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ள தகவுப் பதிவாளர் களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல்.
கடந்த 2002ஆம் ஆண்டில் கருணை அடிப்படையில் பணி கேட்டு காத்திருப்போர் பட்டியலில் இருந்த 805 நபர்கள் தகவுப் பதிவாளர்களாக தேர்வு செய்யப்பட்டு மாதம் ரூ. 2500 தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்டனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு மேல் இவர்கள் தொடர்ந்து தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகிறார்கள். இடைக்காலத்தில் ஒரு சிலர் தட்டச்சர் மற்றும் இளநிலை உதவியாளர் பதவிகளில் காலமுறை ஊதிய விகிதத்தில் மாற்றப்பட்டுள்ளனர். மீதமுள்ள சுமார் 650 நபர்களுக்கு காலமுறை சம்பள விகிதம் இந்த ஆண்டு நிர்ணயிக்கப்படும்.
அறிவிப்பு 13 சேலம் சரகம் அலுவலகத்திற்கு அமைச்சுப் பணியாளர்கள் பதவிகளை ஏற்படுத்துதல்.