உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/684

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

683

நாள் முழுவதும் அங்கு பணியாற்றுவதாலும் பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய மறு அஞ்சல் நிலையக் கட்டிடம் கட்டப்படும்.

அறிவிப்பு 17 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய நுண்ணலை தொலைத் தொடர்பு இணைப்புகள் நிறுவுதல்.

தருமபுரி மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு கிருஷ்ணகிரியைத் தலைமையிடமாகக் கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஏற்படுத்தப்பட்டது. இந்த மாவட்டத்தில் உள்ள காவல்துறை அலுவலர்களுக்கு நுண்ணலை தொலைத் தொடர்பு இணைப்பு வசதி ஏற்படுத்தித் தரவேண்டியது அவசியமாகிறது. இந்த வகையில் கருவிகள் நிறுவவும், கட்டிடங்கள் கட்டவும் ரூ. 94.58 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.

அறிவிப்பு 18 சேலம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகக் கட்டிடம் கட்டுதல்.

சேலம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளது. சுமார் ரூ. 3.5 கோடி செலவில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகக் கட்டிடம் ஒன்று சேலத்தில் புதிதாகக் கட்டப்படும்.

அறிவிப்பு 19 - தமிழ்நாடு சிறப்புக் காவல்படை ஒன்று புதிதாக ஏற்படுத்துதல்.

ரூபாய் 16.52 கோடி செலவில் சுமார் ஆயிரம் பேர் கொண்ட தமிழ்நாடு சிறப்புக் காவல் படை ஒன்று புதிதாகவே உருவாக்கப்படும்.

-

அறிவிப்பு 20 இரண்டாம் நிலைக் காவலர்கள் பணியிடங்களை நிரப்புதல்.

தற்போது சுமார் 14,000 இரண்டாம் நிலைக் காவலர்கள் பணியிடங்கள் காவல்துறையில் காலியாக உள்ளன. இவற்றில் 5000 பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மேலும் 5000 பணியிடங்களும், 2008-2009ஆம் ஆண்டில் மீதமுள்ள 4000 பணியிடங்களும் நிரப்பப்படும்.

அறிவிப்பு 21 - திருவாரூர் மாவட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குக் கட்டிடம் கட்டுதல்.