72
காவல்துறை பற்றி
அப்பொழுது காவல்துறையினர் கை என்ன செய்யும்? பூவையா பறித்துக்கொண்டிருக்கும்? 'நீங்கள் போலீஸ் நடவடிக்கையைத் தடுக்கக்கூடாது. நீங்கள் எந்தவிதமான அறிவுரையும் அவர் களுக்கு வழங்கக்கூடாது' என்று குறிப்பிட்டுவிட்டு நீங்களே 'ஒரு போரட்டத்தைத் தொடங்குவோம்' என்று சொல்லி அதற்கு ஆறு மாத தவணை வைக்கிறீர்கள். இது இரண்டாவது ஆறு மாத தவணை, முதலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தபொழுது ஒரு முறை தவணை வைத்தீர்கள். இங்கே ஆறு மாத தவணை கொடுக்கிறீர்கள். காங்கிரஸ் கட்சி பெரிய தலைவர்கள் 6, 7 நாள் என்று சொல்கிறார்கள்.
திரு. பி. ஜி. கருத்திருமன் : எதற்கு முதலில் ஆறு மாதம் என்று சொன்னார்கள்? ஆறு மாதத்திற்கு தி.மு.க. ஆட்சி யைப்பற்றி ஒன்றும் பேசக்கூடாது என்றுதான் தவணை வைத்தோம்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : சாட்டையால் அடிப்போம் என்று சொன்னார்கள், அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலையை சிலையை கடலூரில் வீதி வீ கடலூரில் வீதி வீதியாக இழுத்து, சாட்டையால் அடித்திருக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். இவை யெல்லாம் தமிழ்நாட்டுப் பண்பாட்டிற்கு ஏற்றவைகள், அரசியல் நாகரிகத்திற்கு உட்பட்டவைகள் என்பதாக எதிர்க்காட்சித் தலைவர் அவர்கள் கருதுகிறார்களா என்பது எனக்குப் புரியவில்லை.
திரு. பி. ஜி. கருத்திருமன் : இப்போது ஆட்சியில் இருக்கும்படியான அமைச்சர்கள் 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரிசி போடுவோம். படி அரிசி போடவில்லை என்றால், முச்சந்தியில் வைத்து எங்களை சாட்டையால் அடியுங்கள்' என்று சொன்னார்கள். அப்படிச் சொன்னதைத்தான் அவர்கள் செய்தார்கள்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : இப்படி சொன்னதைச் செய்தார்கள் என்று சொன்னால் அதை ஆதரித் தார்கள் என்றுதான் அர்த்தம் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர், ‘ஆளுக்கு ஒரு வீடு தருவோம்' என்று சொன்னார். தமிழ் நாட்டில் காங்கிரஸ் வெற்றி பெறாவிட்டாலும், அகில இந்திய ரீதியில் பல மாநிலங்களில் வெற்றி பெற்றுவந்திருக்கிறது. ஆளுக்கு