உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

காவல்துறை பற்றி

ஒரு பத்திரிகையில் வருகிறது. காவல்துறை பற்றி வந்திருக்கிறது.

"மதுரையிலே நாலைந்து வாய்தாக்களுக்கு நெடுமாறனைக் கைது செய்யப் பயந்து அவமானமுற்ற போலீஸ் நாய்கள் ஒரு காரணமுமில்லாமலே நமது தோழர் களைத் தாக்கி இருக்கின்றன.

கடிதம் 6-3-69"

"போலீஸ் இலாகாவிலுள்ள பேதைகளுக்கு என்னுடைய கடைசி எச்சரிக்கை ஒன்று. இன்றைய ஆட்சி தன் மரணப் மரணப் படுகுழியை படுகுழியை வேகமாகத் தோண்டிக் கொண்டிருக்கிறது. இதை நம்பி சட்டத்திற்குப் புறம்பான காரியங்களில் போலீஸ் ஈடுபடுமானால் அதன் அழிவு வெகு தூரத்தில் இல்லை,

கடிதம் 6-3-69"

1969-ல் திராவிட முன்னேற்றக் கழக அரசு வருவதற்கு முன்பு தேர்தல் பிரசாரத்தின்போது, மைலாப்பூரில் திரு. அரங்கண்ணலை ஆதரித்துப்பேசிய கூட்டத்தில், காவல் துறையினர் வெகு பாரபட்சமாக நடத்துகிறார்கள். ஆட்சியாளர் களின் பக்கம் சேர்ந்து கொண்டு அடக்கு முறைக்கு ஆளாக்கு கிறார்கள் என்று நாங்கள் உணர்ந்து, அன்றைக்கு நான் சொன்னேன், 'ஒரே ஆட்சி என்பது நிச்சயமில்லை; ஆட்சி மாறி மாறி வரும்; கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வரும்; ஆறு நாள் தான், அரசு மாறக்கூடும், எங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கா தீர்கள் என்று. அதே இடத்தில் மறுநாள் பக்தவத்சலம் பேசியிருந் தார்கள், எல்லாப் பத்திரிகைகளிலும் வந்திருந்தது. “கருணாநிதி ஆட்சி மாறும் என்ற ஒரே வார்த்தைக்கு எச்சரிக்கிறேன், சட்டப்படி வழக்குத் தொடரப்படும்" என்று பக்தவத்சலம் குறிப்பிட்டிருந்தார்கள். என் நல்ல காலமோ என்னமோ, ஆறு நாளைக்குப் பிறகு அவர் ஆட்சிக்கு வரவேயில்லை; வந்திருந்தால் ஒருகால் பாளையங்கோட்டைக்குப் பதில் ஒரு பாலைவனக் கோட்டையைத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடும். இவை அந்த அளவிற்குத் தரக் குறைவான வார்த்தைகள்? பத்திரிகையில் போட்டிருக்கிறது. "இதை நம்பி சட்டத்திற்குப்