உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

81

அணைத்துவிடும் நிலைமை இருந்தது. இந்த நிலைமை குடும்பக் கட்டுப்பாடு திட்டத்திற்கு ஏற்றதல்ல. (சிரிப்பு). ஆகவே, தற்போது 10 யூனிட்டுகள் வரை மின்சாரத்தைப் பயன்படுத்தலாம் என்ற நிலையை, இரவு எட்டு மணி வரைக்கும் விளக்கு எரிக்கலாம் என்ற நிலையை மாற்றி, 20 யூனிட்டுகள் வரை மின்சாரத்தைப் பயன்படுத்தலாம் என்று இந்த அரசு வசதி செய்து கொடுக்திருக் கிறது. இதன் காரணமாக, இந்த அரசுக்குக் கிட்டத்தட்ட 8 இலட்சம் ரூபாய் செலவாகும். நிதியமைச்சர் அவர்களோடு கலந்து கொண்டு இதைக் கொடுத்துவிடலாம் என்று இருக்கிறோம். (திரு. பி. ஜி. கருத்திருமன் : நாங்களும் கொடுத்துவிடுகிறோம்).

அடுத்தபடியாக, இன்டியன் போலீஸ் மெடல், பிரசிடென்ட்ஸ் போலீஸ் அவார்டு என்ற இரண்டு மெடல்கள் சுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் மத்திய அரசால் கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும், பதினைந்து ஆண்டுக்காலம் அல்லது சில குறிப்பிட்ட ஆண்டுக்காலம் பணி புரிந்தவர்களுக்கும், அவர்கள் புரிந்த தீரச்செயல்களுக்குச் சான்றாகவும் கடமையில் வழுவாமல் இருந்த காரணங்களுக் காவும் குறிப்பிட்ட எண்ணிக்கையினர் சுமார் 50 பேர்களை சிபாரிசு செய்து மத்திய அரசுக்கு ஒரு பட்டியலை அனுப்புகிறோம். அப்படிப்பட்ட பட்டியலில் அவர்கள் ஐந்தாறு பேர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இன்டியன் போலீஸ் மெடல், பிரசிடென்ட்ஸ் போலீஸ் அவார்டு என்று பதக்கங்களை குடியரசுத் தலைவர் வழங்குகிறார்கள். இப்போதும் அந்த முறை நீடிக்கப் படலாம். மாநில அரசின் அளவில், திறமையாகப் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் சிறுசிறு தவறுகளைச் செய்திருந்தால்கூட இத்தகைய புகழைப் பெறலாம் என்ற அளவில் போலீஸ் துறையினரை ஊக்குவிக்கும் தன்மையில் மாநில மட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இத்தனை பதக்கங்கள் என்று குறிப்பிட்டு, அதனை, பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாளான ஒவ்வொரு செப்டம்பர் 15-ம் தேதியன்று வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்பதையும், அதற்கு 'முதலமைச்சர் பதக்கம்' என்று பெயர் வழங்கலாம் என்பதையும் இந்த மாமன்றத்தின் மூலமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

4- - க.ச.உ. (கா.து.)