உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

91

சென்ற ஆண்டும் உணவுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதைப் போலவே வாகனங்களுக்காக சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்டதைவிட இந்த ஆண்டு குறைவு என்று சொன்னார்கள். சென்ற ஆண்டே வாங்கவேண்டிய வாகனங்கள் வாங்கிவிட்டதால் இந்த ஆண்டு வாங்கவேண்டியதில்லை. ஆகவே பராமரிப்புச் செலவுக்காகக் குறைவாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டு வாங்கிவிட்ட காரணத்தால் இந்த ஆண்டு குறைவு ஏற்பட்டிருக்கலாமே தவிர குறைக்கவேண்டும் என்ற காரணத்தால் குறைக்கப்படவில்லை என்பதை மார்ட்டின் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

போலீஸ் துறையினருக்கு சங்கம் வைக்க வேண்டும் என்று நம்முடைய ராமச்சந்திர துரை அவர்கள் சொன்னார்கள். போலீஸ் துறையினருக்கு சங்கம் இருந்து முன்பு ஒருமுறை என்னென்ன சங்கடங்கள் ஏற்பட்டன என்பதை நான் அறிவேன். போலீஸ்காரர் களுக்கு சங்கம் எந்த மாநிலத்திலாவது இருக்கிறதா என்று கேட்டேன். மேற்கு வங்காளத்தில் மட்டும்தான் இருக்கிறது என்று தெரிகிறது. ஆகவே, சங்கங்கள் வைத்துக்கொண்டிருக்கிற போலீஸ்காரர்கள் சட்டசபை வரையில் நுழைகிறார்கள் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவேதான், போலீஸ்காரர்களுக்குச் சங்கம் வைத்து அவர்களுக்குரிய உதவிகளைச் செய்வதைவிட சங்கங்கள் வைக்காமலே அப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்யக்கூடாதா என்பதை இந்த அரசாங்கம் உணராமல் இல்லை. இந்த அடிப்படையின் காரணமாக போலீஸ் கமிஷன் ஒன்றை அமைத்திருக்கிறோம். அந்தப் போலீஸ் கமிஷன் வெகு விரைவில் அதனுடைய அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று நம்புகிறேன். அவர்களுக்கு என்னென்ன தேவை என்பதை எல்லாம் அந்தப் போலீஸ் குழு ஆராய கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவில் நம்முடைய மதிப்பிற்குரிய சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் இருக்கிறார். அவர் இந்த மன்றத்தில் இன்றைய தினம் நடைபெறுகின்ற விவாதத்தை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருக் கிறார்கள். ஆகவே, காவல்துறையினருக்கு அந்தப் போலீஸ் குழுவில் செய்யவேண்டிய காரியங்களுக்காக நிச்சயமாக குறிப்புக்களைத் தயாரித்து அனுப்புவார் என்று நம்புகிறேன். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. போலீஸ் குழுவில் போலீஸ் துறையினர்