கலைஞரின் சட்டமன்ற உரைகள்
-
93
நண்பர் ராமச்சந்திர துரை அவர்கள் இங்கே பேசிய நேரத்தில் ஜெமினிக்குப் பக்கத்தில் ஒரு கார் சென்றது என்றும். சீப் அதற்குப் பின்னால் சர்க்கார் தலைமைச் செயலாளர் செக்ரட்டரி சென்றார். கமிஷனர் வீட்டில் கார் நின்றது, ஒரு போலீஸ் படையை வைத்திருந்தார்கள் என்றும் சொன்னார்கள். அதற்கு எந்தவிதமான அடிப்படையும் இல்லை. நான் விசாரித்துப் பார்த்த அளவில் அப்படி எந்தவிதமான சம்பவமும் நடைபெறவில்லை என்று எனக்குத் தகவல் வந்திருக்கிறது. ஆகவே அந்தத் தகவலை நண்பர் அவர்களும் நம்புவார்கள் என்று கருதுகிறேன். அவரும் தனக்கு யாரோ சொன்னதாகத்தான் சொன்னார்கள். அது ஆதாரமற்றது என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
மதுவிலக்குபற்றிப் பேசப்பட்டது. திரு. கிருஷ்ணசாமி கவுண்டர் அவர்கள் சுதந்திரா கட்சியினுடைய பிரதானத் தலைவர்களிலே ஒருவர். அவர்கள் சொன்னார்கள் மதுவிலக்கை ரத்துச்செய்யுங்கள், தேவையே இல்லையென்று சொன்னார்கள். அதோடு இன்னொன்றும் சொன்னார்கள். ராஜாஜியைக் கேளுங்கள் என்று முதலமைச்சர் அவர்கள் சொல்கிறார்கள். ராஜாஜி சொல்வதையெல்லாம் முதலமைச்சர் கேட்கிறரா என்று சொன்னார்கள். அப்படிக் கேட்காமல் மதுவிலக்கை ரத்து செய்யுங்கள் என்று ஒரு நல்ல யோசனையைச் சொல்லிக் கொடுத்தார். ராஜாஜி சொல்வதை கேட்கக்கூடாது என்பதல்ல, கேட்கமுடியாத நேரத்திலே கேட்காமல் இருப்போம். ராஜாஜி என்ன சொல்வது நாம் என்ன கேட்பது என்று நானோ அல்லது அமைச்சரவையோ அல்லது முன்னேற்றக் கழகமோ நினைப்பதில்லை. ராஜாஜியல்ல, எந்தப் பெரியவர் சொன்னாலும், காமராஜர் சொன்னாலும் கேட்க முடிந்ததைச் சொன்னால் நிச்சயமாகக் கேட்போம். திரு. கிருஷ்ணசாமி கவுண்டர் எடுத்துச்சொன்ன அபிப்பிராயம் பரவலாக நாட்டிலே அனைவருடைய உள்ளத்திலே இருந்து வருகின்ற ஒன்றாகும். எடுத்துவிட்டால் என்ன ? அதிக வருமானம் வருமே, கணக்குத்தானே உயருகிறது. திரு. சங்கரய்யா அவர்கள்கூடச் சொன்னார்கள், சென்ற ஆண்டு 2 லட்சம், அடுத்த ஆண்டு 3 லட்சம் என்ற அளவுக்கு கணக்குத்தானே உயருகிறது என்று சொன்னார்கள். கணக்கு உயர்கிற அதே நேரத்திலே குற்றவாளிகளும் அதிகமாகப் பிடிக்கப்படுகிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
3