பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை பேசும் தெய்வம் சின்னஞ் சிறியதோர் வாய் திறந்து-மழலை சிந்துகையில் மன நோய் பறந்து, பன்ன்ரும் பேரின்பம் ஆகுதடா-சித்தர் பகர்ந்த வெலாமெங்கோ போகுதடா வாரி யணைத்ததைக் கொஞ்சுகையில் - முத்த மாரி வழங்கிடக் கெஞ்சுகையில் மீறி உதைத்திடு காலிரண்டும் - பத்தி மேவி வனங் கிடும் தானிரண்டாம் வா கண்ணே என்றுகை நீட்டுகையில்-பொக்கை வாய் திறந் தன்பு சிரிக்குதடா சோகம் முதற்பகை மாய்ந்திடவே - அது சுட்டுப் பொசுக்கும்புன் மூரலடா நீராட்டிப் பொட்டிட்டு மேனியிலே - நல்ல நீலப்பட் டாடையைச் சூட்டிச்சிறு தேசோட்டம் ஒட்டிநான் காட்டுகையில் - அது தெய்வத் திருநாளாய்த் தோன்றுதடா 79