பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#7 பிறப்பினும் யாவரேயாயினும் கற்றவராயின் அவரே உயர்ந்தவர்,' என்னும் சிறந்த கொள்கை உடையவன். அக் காரணத்தால் உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் கன்றே' என்று, தன் காட்டு மக்கட்கு நல்லுரை பகர்ந்தான். இவனே பொற்கொல்லன் சூழ்ச்சியால் கோவலனைக் கொல்வித்த பாண்டியன் ஆவான். சோழன் நெடுமுடிக்கிள்ளி - சித்தலைச்சாத்தனர் காலத்தில் சோழநாட்டை ஆண்ட அரசன் நெடுமுடிக்கிள்ளி என்பவன். இவன் சேரன் செங்குட்டுவனுக்கு மாமன் மகனுகிய மைத் துனக் கேண்மையன். இவன் காவிரிப்பூம்பட்டினத் தைத் தலைநகராகக்கொண்டு சோழநாட்டை ஆண்டு வந்தான். இவன் செங்குட்டுவன் பெருந்துணையால் அரசினேப் பெற்றவன். இவனுக்கு மாருகச் சோழ மரபினர் பலர் கிளர்ச்சிசெய்தனர். செங்குட்டுவன் அன்னவரை எல்லாம் அடக்கி ஒடுக்கி நெடுமுடிக் கிள் ளியை அரசனுக்கினன். இவன் பாணர் மரபில் தோன் றிய பாவை ஒருத்தியை மணந்து, அவளேயே கோப் பெருந்தேவியாகவும் கொண்டான். இவன் மகனே மணிமேகலையைக் காதலித்த உதயகுமரன் என்பான். செங்குட்டுவன் தொடர்பு இவர்கள் காலத்தில் சேரப் பேரரசைச் சிறப்புற கடத்தியவன் செங்குட்டுவன் என்பான். இவனே இளங்கோவடிகளின் உடன் பிறந்த தமையனவான். சேரப் பெருவேந்தனகிய செங்குட்டுவனது செந்தமிழ்ப் பற்றையும், அவன் இளவலாகிய இளங்கோவின் வள மான தமிழ்ப்புலமையையும் கேள்வியுற்ற சாத்தனர்