கலைஞரின் சட்டமன்ற உரைகள்
109
ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த ஜெகஜீவன்ராம் அவர்கள் தலைமையில் தான் இரண்டு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றன. அப்போது என்ன பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது என்பதை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. நம்மைப் பொறுத்தவரையில் இங்கே இருக்கிற அனைத்துக் கட்சிகளையும் பொறுத்தவரையில் இன்றைக்கு எவ்வளவு தண்ணீரை நீங்கள் பெற்றுத் தருகிறீர்களோ... மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி தலைவரவர்களே, ஒரு 'சென்சிட்டிவ்' பிரச்சனை. அதனால்தான் நான் அடிக்கடி தலையிட வேண்டியதாக இருக்கிறது. நான் பதில் சொல்லும்போது நான்கு நாட்கள் கழித்துகூட சொல்லலாம். ஆனால் அதற்கிடையிலே உங்களுடைய பேச்சு பத்திரிகையில் வந்துவிடுமேயானால் அது கர்நாடக மாநிலத்திற்கு சாதகமாக ஆகிவிடும் என்பதால்தான் நான் குறுக்கிட விரும்புகிறேன். நீங்கள் பேசுகின்ற பேச்சு அவர்களுக்கு சாதகமாக ஆகிவிடக்கூடாது: தமிழ் நாட்டிற்குப் பாதகமாக ஆ கிவிடக் கூடாது என்பதற்காகத்தான் நான் குறுக்கிடுகிறேனே அல்லாமல் வேறு அல்ல. அப்போது ஒரு ஒப்பந்தம் வந்தது. 100 டி.எம்.சி. கிக்கனப்படுத்த-அதைக்கூட குறைத்துக் கொள்வது என்று குறிப்பிடக் கூடாது. 100 டி.ம்.சி தண்ணீரை சிக்கனப்படுத்த 'மார்டனைசேஷன்' மூலமாக தமிழ்நாட்டிலே 100 டி.எம்.சி. தண்ணீரை சிக்கனப்படுத்த ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டு, அந்த ஒப்பந்த வரைவு வந்தபோது சில 'டெக்கனிக்கல் டெர்ம்ஸ்' நமக்கு சரி வரவில்லை. எந்தஇடத்திலே இருந்து சீர் செய்வது, எங்கே இருந்து தண்ணீரை அளப்பது என்பதிலே அந்த ஒப்பந்தம் நமக்கு சரிவரவில்லை எனவே தான் கையெழுத்துப் போடாமல் வந்தோம். தமிழ்நாட்டின் நன்மைக்காகச் செய்யப்பட்ட காரியம் அது.
திரு. கே. ஏ. செங்கோட்டையன்: மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொன்ன கருத்தின் அடிப்படையிலே அதை விட்டுவிட்டு வேறு பிரச்சனைகளுக்கு நான் வருகிறேன். காரணம் முதலமைச்சர் அவர்களே சொல்லிவிட்டார்கள். தமிழ்நாட்டிற்குத் தேவையான தண்ணீரை பெற வேண்டியிருக்கிற காரணத்தால் பல்வேறு பிரச்சனைகளை ஆய்ந்து முடிவு