உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

காவிரிப் பிரச்சினை மீது

என்னிடத்திலே சொன்னார். மீண்டும் முதலமைச்சர்களை அழைத்து வைத்துப் பேச அது வசதியாக இருக்கும் என்று குறிப்பிட்டார்கள். அவர்கள் குறிப்பிட்டதையொட்டி 29-5-1972-ல் மூன்று மாநில முதல்வர்கள் தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய 3 மாநில முதலமைச்சர்களுடைய கூட்டத்தை அன்றைக்கு இருந்த மத்திய அமைச்சர், நீர்ப்பாசனத் தறை அமைச்சர் திரு.கே.எல்.ராவ் அவர்கள் கூட்டினார்கள்.

29 ஆம் தேதி டில்லியிலே கூட்டம் என்றதும் 27-5-1972 அன்று சென்னை தலைமைச் செயலகத்திலே உள்ள கேபினட் அறையில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடைய கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் யார், யார் கலந்து கொண்டார்கள் என்பதையும் நான் சொல்ல விரும்புகிறேன். திருவாளர்கள் ஆர்.பொன்னப்ப நாடார், திருப்பூர் மொய்தீன். ஆறுமுகச்சாமி. ஏ.ஆர். மாரிமுத்து, எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி, ஏ.ஆர்.பெருமாள், ஆர்.சக்திமோகன், கே.டி.கே. தங்கமணி, கே.ராஜாராம், ஏ.ஆர்.தாமோதரன், டாக்டர் ஹெச்.வி.ஹாண்டே. டி.கே.சண்முகம், கெ.எஸ்.அப்துல்வகாப், சிலம்புச் செல்வர் ம.பொ.சி.- இவர்கள் அந்தக் கூட்டத்திலும் கலந்து கொண்டார்கள்; அதற்கு அடுத்து நான் டில்லிக்குச் சென்று திரும்பிய பிறகு 4-6-1972-ல் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் அவர்கள் எல்லாம் கலந்துகொண்டார்கள். அப்போது அந்தக் கூட்டத்தில் பிரதமர் அவர்கள், பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளலாம் என்றும், அதற்கு முன்னர் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்வது நல்லது என்றும் தெரிவித்த கருத்து விளக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதுதான் அந்தக் கூட்டத்தினுடைய 'மினிட்ஸ்'.

அவர்களுடைய கருத்தை ஆராய்ந்த பிறகு 7-7-1972 அன்று ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு எண் 1/71ஐத் திரும்பப் பெற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டது, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு, அந்த அடிப்படையிலே 28-8-1982 அன்று உச்ச நீதிமன்றத்திலே மனு விண்ணப்பிக்கப்பட்டு, தமிழக அரசு தொடர்ந்த வழக்கைத் திரும்பப்பெற அனுமதி வழங்கப்பட்டதோடு, தேவைப்பட்டால்