உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

று

139

பாலைவனமாக ஆக்குவதற்குத்தான் இன்றைக்குத் திட்ட மிட்டிருக்கிறார்கள் என் எண்ணத் தோன்றுகின்ற காரணத்தினாலேதான் மத்தியஅரசு இதிலே யாருக்கும் சாதகமாக இருக்கத் தேவையில்லை; நடுநிலையோடு நடந்து கொண்டால் போதுமானது.

நடுநிலையோடு நடந்து கொள்வது, நடுவர் தீர்ப்புக்கு விடு வதற்கு எது வழியோ, அந்த வழியை மத்திய அரசு அணுக வேண்டியது என்பது தான். இப்பொழுதுள்ள நிலை கூட மத்திய அரசே கூட நடுவர் தீர்ப்புக்குவிட வேண்டுமென்று அல்ல. உச்ச நீதிமன்றத்திற்கு உண்மையைச் சொல்லிவிட்டால் போதுமானது. எனவேதான், நேற்றைய தீர்மானத்திலே கூட மறைக்காமல் மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்திற்குச் செய்தியைச் சொல்ல வேண்டுமென்று திட்டவட்டமாக, அழுத்தம் திருத்தமாக நாம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.

கூட உண்மையை

உங்களுக்குத்தெரியும், திராவிட முன்னேற்றக் கழக அரசைப் பொறுத்தவரையில், யார் மத்தியிலே இருந்தாலும் சரி-அவர்கள் வேறு கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, நம்முடைய கட்சியைச் சேர்ந்தவர்களேகூட மத்திய அரசிலே இடம் பெற்றிருந்தாலும் சரி, உறவுக்குக் கை கொடுப்போம்- உரிமைக்குக் குரல் கொடுப்போம்-என்பதிலேயிருந்து எந்த நேரத்திலும் இம்மியளவும் மாறாத அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசு என்பதை நான் நினைவுபடுத்தக் கடமைப் பட்டிருக்கின்றேன்.

இன்றைக்கு இந்த அரசின் சார்பில் டெல்லிக்குச் சென்று பிரதமரைச் சந்தித்துத் திரும்பியிருக்கின்ற நாடாளுமன்றக் குழுவினர் நம்பிக்கையோடு இருக்கின்றார்கள். அதைத்தான் பொதுப்பணித்துறை அமைச்சர் நேற்றையதினம் "நாங்கள் பிரதமரிடத்திலே குழுவின் சார்பாகச் செய்திகளை எடுத்து வைத்திருக்கின்றோம், அனுதாபத்தோடு கவனிப்பதாக அவரும் கூறியிருக்கிறார்" என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த நம்பிக் கையோடு நாளையதினம் மத்திய அரசு எப்படி நடந்து கொள்ள இருக்கிறது என்பதை நாம் கவனித்துக் கொண்டிருக்கின்றோம்; மத்திய அரசுக்குத் தெரிவித்து இருக்கின்றோம்; திட்டவட்டமாகத் தெரிவித்து இருக்கின்றோம்.