இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கலைஞரின் சட்டமன்ற உரைகள்
153
நியமிக்கவேண்டும். அப்போதுதான் நடுவர் மன்றம் முழுமை பெற்றதாக ஊனம் இன்றி இருக்கிறது என்று பொருள். அப்போது தான் நடுவர் மன்றத்தை நாம் பயன்படுத்திக்கொள்ளமுடியும் என்ற நிலை. எனவே, உடனடியாக அந்தக் குறையைப் போக்க வேண்டும் என்று மத்திய அரசை, இந்தத் தீர்மானத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, இந்த அவையின் மூலமாக நான் கேட்டுக்கொள்கிறேன். ஜூலை திங்களுக்குள்ளாக அப்படி அந்த நீதிபதி நியமிக்கப்படாவிட்டால் ஆகஸ்ட் திங்களில் இந்த மாமன்றத்திலே அது குறித்து ஒரு தீர்மானமே நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பலாம் என்று இருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).