உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

காவிரிப் பிரச்சினை மீது

உரை : 20

நாள் : 27.08.1996

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எதிர்க் கட்சித் தலைவரும், மற்ற உறுப்பினர்களும், இறுதியாகப் பேசிய மாண்புமிகு உறுப்பினர் திரு. அப்துல் லத்தீப் அவர்களும் நடுவர் மன்றத்தினுடைய தீர்ப்பைப் பெறுவதற்கு நடுவர் மன்றத்திலே தலைமை வகிக்கும் நீதிபதி பதவி விலகிவிட்டாரே, அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவாரா? அதுபற்றி இந்த அவையிலே பேசப்பட்ட பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்பட்டு விட்டதா என்ற வினாவை எழுப்பியிருக்கிறார்கள். நடுவர் மன்றத்தினுடைய தீர்ப்பை எதிர்நோக்கித்தான் நடுவர் மன்றமே தேவை என்ற அந்த முடிவை எடுத்து அதை வலியுறுத்தி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலேயே கடந்த காலத்திலே நடுவர் மன்றம் அன்றிருந்த மத்திய அரசால், திரு. வி. பி. சிங் அவர்களால் அமைக்கப்பட்டது என்பதை யாரும் மறந்து விட முடியாது.

இப்போது நடுவர் மன்றத்தினுடைய தலைவர் பற்றி விலகியதற்குப் பிறகு ஏற்பட்டுள்ள ஒரு சங்கடமான சூழ்நிலை என்ன ஆகுமோ என்ற எதிர்ப்பார்ப்பு, ஆவல் இவைகளுக்கு இடையே இந்த அவையிலேயே இரண்டொருமுறை அதுபற்றி பேசி, இரண்டு கடிதங்களும் தமிழக அரசின் சார்பாக இந்திய பிரதமர் அவர்களுக்கு எழுதப்பட்டிருக்கிறது. நான் சென்ற முறை டெல்லிக்குச் சென்றபோது பிரதமர் அவர்களைச் சந்தித்து அது பற்றி அவர்களிடத்திலே பேசியிருக்கிறேன். அப்போது அவர் சொன்னது, நடுவர் மன்றத் தலைவரை நியமிப்பதிலே எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. அது உச்ச நீதி மன்றம் மூலமாக வரவேண்டிய ஒன்று. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு