உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

காவிரிப் பிரச்சினை மீது

திரு. வி. பி. சிங் அவர்களை நாம் வலியுறுத்தி, அவர்களும் உடனடியாக நடுவர் மன்றத்திற்கான உத்தரவைப் பிறப்பித்து, நீதிபதி நியமிக்கப்பட்டு, நடுவர் மன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்த சூழ்நிலையில், ஒரு இடைக்காலத் தீர்ப்பு அளிக்கப்படுகின்ற ஒரு காலகட்ட,த்தில், திராவிட முன்னேற்றக் கழக அரசு கலைக்கப்பட்டது. அதற்குப் பிறகு, அந்த இடைக்காலத் தீர்ப்பைக் கர்நாடக அரசு நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறியது. அதன் காரணமாக, முன்பிருந்த அரசும், இன்றைக்கு இருக்கின்ற இந்த அரசும் சட்டத்தின் உதவியை நாட வேண்டிய நெருக்கடிக்கு ஆளாயின என்பதையும் அவை உறுப்பினர்கள் நன்றாக அறிவார்கள்.

இப்போதுகூட கர்நாடக முதலமைச்சரோடு அமர்ந்து பேச வேண்டும் என்பதில்லை. மாண்புமிகு உறுப்பினர் அழகிரி அவர்கள் குறிப்பிட்டதைப்போல, உச்சநீதிமன்றத்தின் ஒரு யோசனைக்கு ஏற்ப, நம்முடைய சம்பாப் பயிர், குறுவைப்பயிர் ஆகியவற்றிற்குத் தண்ணீர் தேவை என்ற நெருக்கடியின் காரணமாக, உச்சநீதிமன்றத்திற்கு நாம் சென்றபோது, 'நீங்கள் அதைப்பற்றி ஒருமுறை பேசுங்கள்' என்று தமிழக அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் அவர்கள் தந்த அறிவுரையின் காரணமாக, பேசலாமா, வேண்டாமா என்ற அந்த விவாதத்திற்கு இடம் தராமல், உச்சநீதிமன்றத்தை அவமதித்ததாகும் என்ற காரணத்தால், அந்த அடிப்படையிலே பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. பேச்சுவார்த்தை தொடங்கப்பட்ட அந்த நிலையில், அப்பொழுது நமக்குத் தேவைப்பட்ட தண்ணீரை முழு அளவிற்குக் கர்நாடக அரசு தராவிட்டாலும்கூட, ஓரளவு தண்ணீரை அவர்கள் வழங்க முன்வந்தார்கள். அதோடு சேர்ந்து மழையும் வந்துவிட்ட காரணத்தால் அதற்குமேல் அவர்களிடத்திலே தண்ணீர் கேட்க வேண்டிய அவசியமில்லாமல் போயிற்று. அப்போது கர்நாடக மாநில முதல்வர் அவர்கள், நடுவர் மன்றத்திற்கு நாம் ஏன் செல்ல வேண்டும், பேசியே தீர்க்கலாம் என்று சொன்னபோதுகூட, அதற்காக நாம் நடுவர் மன்றத்தை வேண்டாம் என்று எந்தக் காலத்திலேயும் சொல்லவில்லை. நடுவர் மன்றம் இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கிடையில் நாம் பேசித் தீர்த்தால், நடுவர் மன்றத்திலே சொல்லி, 'நாங்கள் பேசித் தீர்த்து விட்டோம்.