உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

169

உரை : 22

நாள் : 12.03.1997

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நதிகளை இணைப்பது என்பது வேறு; தேசிய மயம் ஆக்குவது என்பது வேறு. இணைப்பது என்பது ஏற்கெனவே கங்கையிலிருந்து காவிரி வரையில் இணைப்பது என்ற ஒரு திட்டம் மாண்புமிகு மறைந்த கே. எல். ராவ் அவர்களுடைய முயற்சியால் மேற்கொள்ளப்பட்டது. ஒரு நேரத்திலே நான், திருவாளர்கள் வீரேந்திர பாட்டீல். அச்சுதமேனன் ஆகிய மூன்று முதலமைச்சர்களும் கே. எல். ராவ் அவர்களைச் சந்தித்து இதைப்பற்றிக் கேட்டபோது, அவர் 3 மணி நேரம் எங்களுக்கு விளக்கம் அளித்தார். படம் எல்லாம் போட்டுக்காட்டி அதிகாரிகளை எல்லாம் வரவழைத்து கங்கையையும், காவிரியையும் இணைக்க என்ன செலவு ஆகும். எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்று எல்லாம் கணக்கிட்டு கங்கையிலிருந்து தண்ணீரை எழுப்பி, முதல் நீரேற்றும் இடத்திற்கே இந்தியா முழுமைக்கும் பயன்படுத்தப்படுகின்ற மின்சாரம் அந்த ஒரு இடத்திற்கே தேவைப்படுகிறது என்று கே. எல். ராவ் அவர்கள் குறிப்பிட்டு. எனவே, இது சாத்தியம் இல்லாதத் திட்டம் என்று உணரப்படுகிறது என்று குறிப்பிட்டார். அதற்குப் பிறகுதான், தமிழகத்தின் சார்பில் கருத்துக்களை எடுத்துக் கூறுகிற நேரத்தில் கோதாவரி பகுதியிலிருந்து காவிரியை இணைத்தால் பிறகு முடிந்தால் கங்கையை இணைத்துக்கொள்ளலாம். தெற்குப் பகுதி வட்டாரத்தைப் பொறுத்தவரையில் கோதாவரி, காவிரி இவைகளை எல்லாம் இணைக்கிற முயற்சியில் ஈடுபட்டால் பிறகு கர்நாடக தண்ணீர் கூட நமக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. அந்த அளவுக்கு தாராளமாக நீர் கிடைக்கும் என்ற திட்டமும் எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது. இவைகளெல்லாம் பரிசீலனையில்