கலைஞரின் சட்டமன்ற உரைகள்
171
உரை : 23
நாள் : 28.04.1997
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த விவாதத்தில் நம்முடைய பேராசிரியர் தீரன் அவர்கள் 2, 3 பொதுவான பிரச்சினைகளைப் பற்றிப் பேசினார்கள். பொதுவான பிரச்சினை என்றாலும் தமிழ் நாட்டிற்கு மிக மிகத் தேவையான பிரச்சினைகளைப் பற்றி இங்கே குறிப்பிட்டார்கள். முதலாவதாக, காவிரியைப் பற்றி அவர்கள் பேசும்போது உடனடியாக ஒரு முடிவை தமிழ்நாட்டு விவசாயிகளுடைய நலனைக் காப்பதற்காக நாம் எடுத்தாக வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். இந்தப் பிரச்சினை எத்தனை ஆ ண்டுக்காலமாக நடைபெற்று வருகின்ற பிரச்சினை என்பதையும் 1968 முதல் பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த காலந்தொட்டு இன்று வரையில் 20 அல்லது 25-க்கு மேற்பட்ட தடவை கர்நாடக அரசோடு கலந்து பேசி மத்திய அரசினுடைய நீர்வளத்துறை அமைச்சர்களை முன் வைத்து அவர்கள் முன்னிலையிலே கலந்து பேசி முடிவு காணாத சூழ்நிலையில்தான் கடந்த காலத்திலே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி 1989–90-ல் இங்கே இருந்தபோது நடுவர் மன்றம் ஒன்றை அமைக்க அன்றிருந்த பிரதமர் வி. பி. சிங் அவர்களைக் கேட்டுக்கொண்டு, அவரும் அதற்கு உடன்பட்டு, நம் சார்பாக நாம் எடுத்துச் சொன்ன கருத்தை நீதிமன்றத்திலே எடுத்து வைக்கின்ற பொறுப்பினை உணர்ந்து ஏற்றுக்கொண்டு, அந்த அடிப்படையிலே நடுவர் மன்றம் அமைந்தது என்பதை நீங்கள் எல்லாம் மிக நன்றாக அறிவீர்கள்.
அந்த நடுவர் மன்றத்திற்குப் பிறகு இடைக்காலத் தீர்ப்புகளை நிறைவேற்றுவதற்கு கர்நாடக அரசு முன்வராத காரணத்தால் ஏற்பட்ட பிரச்சினைகள், குழப்பங்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதான். தொடர்ந்து அதைப்பற்றி விளக்கிக்