உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

177

உரை : 24

நாள் : 30.04.1997

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நீண்ட நெடுங்காலமாக தமிழகத்தினுடைய நீர்வள வாய்ப்புக்கூறு கெடுகின்ற அளவிற்கு கர்நாடக மாநிலத்திலே தொடர்ந்து கட்டப்பட்டு வருகின்ற அணைகள் காரணமாக உருவாகியுள்ள பிரச்சினை குறித்து 1968-ஆம் ஆண்டு முதல், அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த காலந்தொட்டு பேச்சுவார்த்தை பலமுறை, சற்றொப்ப 27 தடவைகளுக்கு மேல் நடைபெற்று அதிலே வெற்றி காணமுடியாத காரணத்தால், மாண்புமிகு உறுப்பினர்கள் எல்லாம் இங்கே எடுத்துக்காட்டியதைப்போல, பிரதமராக திரு. வி. பி. சிங் அவர்கள் பொறுப்பேற்றிருந்த காலகட்டத்தில் நடுவர் மன்றம் ஒன்றைத் தவிர, வேறு வழியில்லை என்ற தீர்மானத்தை இந்த அவையிலே நிறைவேற்றி அனுப்பிவைத்ததின் அடிப்படையில் தீர்ப்பும் வழங்கப்பட்டு, அந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, திரு. வி.பி. சிங் அவர்கள் உடனடியாக நடுவர் மன்றத்தையும் அமைத்து, அந்த மன்றம் வெளியிட்ட இடைக்கால ஆணையை நிறைவேற்ற கர்நாடக மாநில அரசு முன்வராமல், தொடர்ந்து தமிழகம் வலியுறுத்தியதன் காரணமாக மத்திய அரசு அந்த இடைக்காலத் தீர்ப்பை ‘கெசட்டில்' வெளியிட வேண்டும் என்று சொல்லி, கெசட்டிலும் வெளியிட்டபிறகும்கூட கர்நாடகத்தினுடைய பிடிவாதம் இன்னும் நீங்கியபாடில்லை.

இந்தக் காலகட்டத்திலேதான் உச்சநீதிமன்றத்தை இந்த அரசு நாடி தன்னுடைய வழக்கை வலியுறுத்தியபோது, உச்ச நீதிமன்றம் ஒரு தாக்கீது தந்தது. அதாவது 'கருத்துத் தாக்கீது'. அந்த அடிப்படையிலே மீண்டும் ஒருமுறை தமிழகத்தினுடைய

7-க.ச.உ. (கா.பி.)