உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

179

இல்லை. நானும் தமிழகத்தினுடைய உரிமையை விட்டுத்தரத் தயாராக இல்லை - அந்த அளவிலே ஏற்பட்டுவிட்ட முடிவைத் தான் அன்றைக்கு நான் இங்கே எடுத்துக்காட்டினேனேயல்லாமல், கர்நாடக முதலமைச்சரைப் பற்றி ஒரு வார்த்தைகூட நான் இங்கே பேசவில்லை. ஆனால், எந்த பத்திரிகை அப்படிச் செய்தியை வெளியிட்ட டது என்று எனக்குத் தெரியாது. நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் திரு. ஜி. பழனிசாமி அவர்கள் குறிப்பிட்டதைப்போல, ஏதாவது ஒரு பத்திரிகை அப்படி ஒரு செய்தியை வெளியிட்டிருக்கலாம் அல்லது வெளியிலேகூட கர்நாடக மாநிலத்தினுடைய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் திரு. நாகே கவுடா அவர்கள், நான் கர்நாடக முதலமைச்சரைத் தாக்கிப் பேசியதாகக் கற்பனை செய்துகொண்டு அறிக்கை அறிக் வெளியிட்டிருக்கலாம் அல்லது மறுமொழி கூறியிருக்கலாம். நான் இப்போதும் சொல்லுகிறேன், கர்நாடக முதலமைச்சரைப் பற்றிய பேச்சே அன்றைக்கு வரவில்லை, பேசவும் இல்லை. எழுந்திருக்கிற தாவா, கர்நாடக முதலமைச்சருக்கும், தமிழ் நாட்டினுடைய முதலமைச்சருக்கும் இடையே உள்ள தாவா அல்ல. எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அவர் பிரதிநிதித்துவமாக வந்து வாதாடுகிறார். தமிழ்நாட்டினுடைய பிரச்சினைகளுக்காக, முதலமைச்சர் என்ற முறையிலே நான் வாதாடுகிறேன். தனிப்பட்ட முறையிலே, இருவருக்கும் எந்த தகராறும் கிடையாது. ஆரம்பத்திலேயிருந்து, என்னுடைய எண்ணமெல்லாம், இந்தப் பிரச்சினையை வைத்து, கர்நாடக மாநிலத்திலே உள்ள தமிழர்களுக்கும், தமிழகத்திலே உள்ள கன்னட மொழி பேசுகின்றவர்களுக்கும் இடையிலே குழப்பங்கள் வந்துவிடக் கூடாது. ஏனென்றால் ஒருமுறை குழப்பம் ஏற்பட்டு, கர்நாடகத்திலே வாழுகின்ற தமிழ்ப்பெருங்குடி மக்கள் பல பேர் பெரும் அவதிக்கு உள்ளானார்கள் என்பதை நாம் மறந்துவிடு வதற்கில்லை. எனவேதான், இந்தச் சிக்கலைத் தீர்ப்பதிலே நிதானமாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கவேண்டும் என்று நான் கருதுகிறேன். அவ்வாறேதான் நடந்து கொண்டேன். இருந்தாலும்கூட அவர்கள் கடைசிப் பேச்சு வார்த்தையின்போது, முத்தாய்ப்பாக மேகதாதுவைப் பற்றிச் பேசினார்கள். அதற்கு முன்பு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. துரை முருகன்