உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

காவிரிப் பிரச்சினை மீது

அளவில் மூன்றில் ஒரு பங்கு கூடுதலாகவும், பாசனம் பெற ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இவற்றிற்கும் கூடுதலாக, 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் உள்ள ஷரத்து 10 (iv)-ன்-படி காவிரி, அதன் உப நதிகள் இவற்றின் கீழ் புதிதாக பாசன வசதியை பெருக்கிக் கொள்ள மைசூருக்கு வழங்கப்பட்ட உரிமைக்கு 1,10,000 ஏக்கர்கள் அப்பொழுதைய உச்சவரம்பு என விதிக்கப்பட்டுள்ளது.

அந்த ஒப்பந்தத்தின் ஷரத்து 10 (vii) பிரிவின்படி மேலே குறிப்பிட்ட பாசனப் பெருக்கத்தை 1892-வது ஆண்டு ஒப்பந்தத்தின் “எ" ஷெடியூலில் குறிக்கப்பட்ட காவிரி அதன் உப நதிகள் இவற்றின் மேல் மாத்திரமே அணைகள் கட்டி, நீரைத்தேக்கி, பாசனத்தைப் பெருக்க மைசூர் அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அவ்வாறு கட்டப்படும் நீர் தேக்கங்களின் மொத்த நிகர கொள்ளளவு (effective capacity) 45 ஆயிரம் மில்லியன் கன அடி எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தத்தின் அனுபந்தம் 1-ல் கண்டுள்ள கிருஷ்ணராஜசாகர் தேக்க செயல்முறை விதிகளின்படி (Rules of Regulation) தமிழகத்திற்கு உரித்தான நீர்ப் போக்கு அளவு குறைவின்றி பாதிக்கப்படாதவாறே, மைசூர் கட்டும் நீர்த் தேக்கங்களில் நீரைத் தேக்கிச் செயல்பட வேண்டும் எனவும் விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மைசூர் மாநிலம் கிருஷ்ணராஜசாகர் நீர்த்தேக்கத்தின் உள்வாய்ப் பகுதியில் காவிரி ஆற்றின் ஒரு உபநதியான ஹேமாவதியில் ஓர் அணை கட்டி நீரைத் தேக்கத் திட்டம் வகுத்துள்ளது. மைசூர் அரசு ஒப்பந்த ஷரத்துக்களின் 10(iv),(vi) கீழ் ஏற்படத்தக்க, நீர்த் தேக்கங்களில் ஒன்றாக ஹேமாவதி திட்டத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் இந்நீர்த்தேக்கம் கட்டுவதால் ஒப்பந்தம் குந்தகப்படக்கூடிய சூழ் நிலைகள் உருவாகும் எனவும், குறிப்பாக, தமிழகத்திற்கு உரிய நீர்ப்போக்கின் அளவு தொடர்ந்து அனுப்பப்பெற இயலுமா எனவும் மத்திய அரசுக்குத் தமிழக அரசின் சார்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டது. இந்த அச்சம் தீர்ந்து தொடர்ந்து 1924-ம் ஆண்டு ஒப்பந்த விதிமுறைகள் முற்றிலும் தொடர்ந்து பின்பற்றப்படுவதாகும். அதற்கேற்ற உறுதி மொழிகள், விதி முறைகள், நடைமுறை ஏற்பாடுகள், தேக்கும் செயல்முறைகள்