190
காவிரிப் பிரச்சினை மீது
பேசினோம். அந்தப் பேச்சிலே பயன் ஏற்படவில்லை. அதை உச்ச நீதிமன்றத்திற்கு நாம் தெரிவித்தோம். அப்படித் தெரிவித்த காரணத்தால் நம் பக்கத்திலே நியாயம் இருப்பதை நாம் எடுத்துக்காட்டுகின்ற நிலை நமக்கு இருந்தது. பிறகு உச்ச நிதிமன்றத்திலே நாம் வாதாடியது. இதிலே மத்திய அரசு தலையிட்டு தன்னுடைய கருத்தைச் சொல்லவேண்டும் என்பதாகும். ஆனால் ஐக்கிய முன்னணி அரசு என்ன செய்தது என்று இங்கே பாட்டாளி மக்கள் கட்சியினுடைய சட்டமன்றத் தலைவர் கேட்டார். நான் அவருக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
ஐக்கிய முன்னணி அரசுதான் உச்சநீதிமன்றத்திற்கு ஒரு Scheme - ஒரு திட்டத்தைக் கொடுத்திருக்கிறது. அந்தத் திட்டம் உச்சநீதி மன்றத்திற்கு அளிக்கப்பட்டவுடன் அந்தத் திட்டத்தைப் பற்றிய கருத்தை மாநில அரசுகள் தரவேண்டும் என்று தமிழகத்திற்கு, கர்நாடகத்திற்கு, பாண்டிச்சேரிக்கு, கேரளத்திற்குச் சொல்லப்பட்டது. தமிழக அரசின் சார்பாக நம்முடைய கருத்தை வெளியிட்டிருக்கின்றோம். தந்திருக்கின்றோம். ஏறத்தாழ பெரும்பகுதி மத்திய அரசு தந்துள்ள இந்தக் கருத்து நமக்கு ஏற்புடையது என்ற அளவிலே தந்திருக்கின்றோம்.
அதாவது ஒரு 'அத்தாரிட்டி' 'Authority' Cauvery Valley Authority என்ற அமைப்பை ஏற்படுத்தி நடுவர் மன்றத் தீர்ப்பை எப்படி அமல்படுத்த வேண்டும் என்பதை அந்த Authorityதான். அந்த ஆணையம்தான் தீர்மானிக்கும் என்ற திட்டமானது அந்தத் திட்டம். அது நமக்கு எவ்வளவு ஏற்புடைய திட்டம் என்பதை யோசித்துப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம். மத்திய அரசு அப்படி ஒரு திட்டத்தைக் கொடுத்ததுகூட கர்நாடக அரசுக்கு மத்திய அரசும் மீதும், ஐக்கிய முன்னணி அரசின் மீதும் சற்று கோபத்தை உண்டாக்கியது என்பது எல்லோருக்கும் தெரியும். கேரள அரசும் நம்மைப் போலவே இந்தத் திட்டத்தை ஆதரித்தது. பாண்டிச்சேரி அரசும் நம்மைப் போலவே இந்தத் திட்டத்தை ஆதரித்தது. கர்நாடக அரசு இதை ஆதரிக்காமல் Authority என்ற ஒன்று இருக்கக்கூடாது. Committee என்றுதான் இருக்கவேண்டும் என்று சொன்னது. அதை நாம் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மத்திய
ய