உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

காவிரிப் பிரச்சினை மீது

இரட்டைக்குழல் துப்பாக்கியாக இருக்கும் என்று சொன்ன சொல் இன்னமும் என்னுடைய செவிகளில் ரீங்காரம் செய்துகொண்டு தான் இருக்கிறது.

அந்த அளவிற்கு காவிரிப் பிரச்சினையிலே ஒருமித்த கருத்து இருந்தது. எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்து, அதைப்பற்றிப் பேசுவதற்கு அழைத்தபோதெல்லாம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பிரதிநிதிகள் சென்றிருக் கிறார்கள், பேசியிருக்கிறார்கள். ஆனால், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சர்வ கட்சிக் கூட்டங்களுக்கு அழைப்பு அனுப்பியபோதெல்லாம் 'நீ காவிரிப் பிரச்சினைக்கு துரோகம் செய்து விட்டவன்; ஆகவே அந்த சர்வ கட்சிக் கூட்டத்திலே கலந்துகொள்ள முடியாது' என்று அறிவித்து, அப்படி எழுதப்பட்ட கடிதங்களை வெளிப்படையாகவே பத்திரிகைகளுக்குத் தந்து, அந்தக் கூட்டங்களிலே கலந்துகொள்ள மறுத்தவர் செல்வி ஜெயலலிதா அவர்கள்.

இங்கேகூட, ஒருமுறை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 1989-90-ல் திரு. வி. பி. சிங் அவர்கள் அங்கே பிரதமராக இருந்தபோது, நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டுமென்பதற்காக, பொதுப்பணித் துறை அமைச்சர் தலைமையில் ஒரு குழு நம்முடைய தீர்மானத்தை நிறைவேற்றி எடுத்துக்கொண்டு டெல்லிக்குச் சென்ற நேரத்தில், வருவதாக ஒப்புதல் அளித்த திரு. எஸ்.ஆர்.இராதா அப்போது அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். முதலில் கொஞ்சநாள் தம்பி திருநாவுக்கரசு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அதற்குப் பிறகு எஸ்.ஆர்.இராதா அவர்கள் என்று நினைவு அவரும் வருவதாகச் சொல்லி, எல்லோருக்கும் சேர்த்து டெல்லிக்குச் செல்ல விமானத்திற்கான பயணச் சீட்டு பெறப்பட்டு, கடைசி நேரத்திலே நாங்கள் வர இயலாது என்று கூறியது மாத்திரம் அல்ல; அவர்கள் வராதது மாத்திரமல்ல; எங்களோடு வர இருந்த காங்கிரஸ் நண்பர்களையும் வரவிடாமல் அன்றைக்குத் தடுத்து விட்டார்கள். அன்றைக்கு ஒரே ஒரு காங்கிரஸ் எம்.பி. வைஜயந்தி மாலா, அவர்கள்தான் துரைமுருகனுடைய தலைமையில் சென்ற அந்தத் தூதுக் குழுவினுடைய சந்திப்பிற்கு வி. பி. சிங் அவர்களுடைய அலுவலகத்திற்கு வந்தார்கள். மற்றவர்கள்