196
அதைத்தான் இந்த தேசிய
காவிரிப் பிரச்சினை மீது
திட்டத்திலே
அவர்கள்
ஏற்றியிருக்கிறார்கள் என்று தினமணிகூடத் தலையங்கம் தீட்டியிருக்கிறது; படித்துப் பார்த்தேன்.
அதுமாத்திரம் அல்ல. கர்நாடகத்தினுடைய குரல் இன்றைக்கு ஹெக்டே மூலமாக அங்கே ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஹெக்டேயினுடைய குரல்தான் இந்தத் திட்டத்திலே இருப்பதாக என்னால் உணர முடிகிறது; உணர முடிகிறது என்ன. உண்மையும் அதுதான். என்ன இருக்கிறது? "We will adopt a National Water Policy which provides for effective and prompt settlement of disputes and time-bound implementation". என்றுதான் இருக்கிறது. அந்த தேசிய நதிநீர்க் கொள்கை என்பது National Water Policy என்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். அதை யாரும் மறுக்கவில்லை; தேசிய நதிநீர்க் கொள்கையை யாரும் மறுக்கவில்லை; வெறுக்கவில்லை; அதை, ஏற்றுக்கொண்டு இருக்கிறோம். ஆனால் அதை வைத்து, அந்தத் தீபத்தை வைத்து, இந்த வீட்டைக் கொளுத்தி விடக்கூடாது. பார்ப்பதற்குத் தீபம்தான். ஆனால் தீபம் என்னுடைய வீட்டைக் கொளுத்தப் பயன்பட்டால் தடுத்தேதான் தீருவேன் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட்டாக வேண்டும். (மேசையைத் தட்டும் ஒலி). தீபம் என்பதற்காக வீட்டைக் கொளுத்தமுடியுமா? 'திரு. பட்டேல் என்ன சொல்கிறார்; கர்நாடகத்தின் முதலமைச்சர் என்ன சொல்கிறார்; கர்நாடக மாநில அரசு என்ன சொல்கிறது? இப்போது ஒன்றும் இந்தப் பிரச்சினையை எடுக்கவேண்டாம்; பேச்சு வார்த்தைக்கு வா, நான் சொல்வதைக் கேள், ஏற்றுக்கொள்' என்றது. பேச்சுவார்த்தைக்கு நாம் மறுத்தபோதுகூட உச்சநீதி மன்றம்தான் தாக்கீது தந்தது, பேசுங்கள் என்று, பேசாவிட்டால் உச்சநீதிமன்றம் தவறாகக் கருதிக்கொள்ளும் என்று, பேசிப் பார்த்தோம். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை வெற்றிப் பெறவில்லை. நீதிமன்றத்திற்குச் சென்று சொன்னோம். பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை; உங்கள் தீர்ப்பை வழங்குங்கள் என்று சொன்னோம் உச்சநீதிமன்றம் மத்திய சர்க்காரைப்பார்த்துக் கேட்டது. ஐக்கிய முன்னணி அரசைப் பார்த்துக் கேட்டது.
உச்ச